கிழக்கில் தமிழ் பெண்களை இலக்குவைத்து நகை திருடும் கும்பல் … [மக்களே அவதானம்]

இலங்கையின் கிழக்குமாகாணம் மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய தமிழ் பிரதேசங்களை இலக்கு வைத்து நகை திருடும் கும்பலின் செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.தனியாக செல்லும் பெண்களை மயக்கி அவர்களிடமிருந்து நகைகள்,பணம் என்பவற்றை திருடிச்செல்லும் சம்பவங்கள் தமிழ் பெண்களை இலக்கு வைத்த நிலையில் சம்பவங்கள் இடமபெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அக்கரைப்பற்று மருதையடி மாணிக்கபிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக சந்தையிலிருந்து வீடுநோக்கி சென்றுகொண்டிருந்த [நா.சுகிர்தராணி 64] பெண்ணொருவரை பின்தொடர்ந்து சென்ற பெண்ணொருவர் சிங்களத்தில் பேசியவாறு அவரை இடைமறித்துள்ளார்.பல நாட்கள் பழகிய பெண்ணைப்போல சிங்களத்தில் உரையாடியவாறு கையைப்பிடித்துள்ளார்.சிலநிமிடங்களில் சுயநினைவை இழந்த அவ் வயோதிப பெண் தானாக தன்னிடமிருந்து தாலிக்கொடி ,காப்பு உட்பட எட்டுப்பவுன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளார்.சிறிது நேரத்தின் பின் சுயநினைவு திரும்பிய நிலையில் தன்னிடமிருந்த நகைகளை இழந்துள்ளைமை பற்றி தெரியவந்துள்ளது.இருதயநோயாளியான அப்பெண் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் பொலிஸில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான பதிவுகள் அருகிலுள்ள சிசிரி கமெராவில் பதிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை கடந்த புதன்கிழமை மற்றொரு சம்வம் கல்முனை பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளது.இலங்கை வங்கியிலிருந்து வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆண்,பெண் என இருவர் வழிமறித்து பொய்யான விலாசம் ஒன்றைகாட்டி விசாரித்துள்ளனர்.அந்தநொடியில் அப்பெண்ணின் கைப்பைக்கு மேல் துணி ஒன்றை போட்டுள்ளனர் சிறிது நேரத்தில் அப்பெண் சுயநினைவை இழந்துள்ளார் அவரிடமிருந்து இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணமும் அவர் அணிந்திருந்த நகைகளையும் அபகரித்து சென்றுள்ளனர்.சிங்களமொழியில் பேசிய இருவரே இக்கொடுமையை புரிந்துள்ளனர் .இதேபோன்று கல்முனை நீலாவணையைச் சேர்ந்த பெண்ணொருவரும் இவ்வாறு மயங்கிய நிலைக்கு சென்றபின் நகைகளை இழந்துள்ளார்.இது மாந்திரீக செயற்பாடாக இருக்கலாமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் செட்டிபாளையத்தை சேர்ந்த மட்டக்களப்பில் வசித்து வரும் ஆசிரியை ஒருவரும் மயங்கிய நிலையில் தாலிக்கொடி காப்பு உட்பட ரூபா இருபத்தொரு லட்சம் பெறுமதியான நகைகளை திருட்டுக்கும்பலிடம் பறிகொடுத்துள்ளார்.

தனிமையில் செல்லும் பெண்களை அணுகி பேச்சுக்கொடுப்பது போல் பேச்சுக்கொடுத்து மந்திரக்கல்,மயக்கமருந்து தெளித்தல் மற்றும் வசியம்மூலம் வசப்படுத்திய பின்னரே அவர்களது உடமைகளை திருடிச்செல்லும் சம்பவம் அண்மைக்காலமாக தமிழ்பிரதேசங்களில் அதிகரித்துள்ளது.இவ்வாறான சம்பவங்களால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது.

முப்பது வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வாழும் தமிழ்மக்கள் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையிலும் தமிழ் பிரதேசங்களில் அதிகரித்துவரும் திட்டமிட்ட நுன்நிதி கடன் திட்டங்கள் அதனால் அதிகரித்துவரும் கடன் சுமைகள் தற்கொலைகள் வேலையில்ல திண்டாட்டம் ,வறுமை , மதமாற்றம் போன்ற இறுக்கமான சூழலில் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் கிழக்கில் சூடுபிடித்திருக்கும் இச் திருட்டு சம்பவங்களால் “மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த” பழமொழி போல் தமிழர்களின் இன்றைய நிலையாகிப்போனது.

எனவே பழக்கமில்லாத நபர்கள் பேசினாலோ அல்லது குடிப்பதற்கு கொடுத்தாலோ,அல்லது அழைத்தாலோ உங்கள் வீடுகளுக்கு அறிமுகமில்லாதவர்கள் வந்தாலோ அவதானத்துடன் செயற்படுமாறு பாதிக்கப்ட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்செல்வி பிரபா…

41Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*