17 வயது பௌத்த பிக்குவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சா கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த மொரவெவ பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியில் 17 வயதுடைய பிக்குவிடம் இருந்து கஞ்சாவை மீட்டுள்ளதுடன், அவரை கைது செய்திருந்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் பௌத்த பிக்குவை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், பெரிய பௌத்த பிக்குவை வரவழைத்து கைது செய்யப்பட்ட பிக்குவை எச்சரித்து விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுட்டால் எவ்வித உதவிகளும் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்து குறித்த பிக்குவை விடுவித்துள்ளனர்.

அதே நேரம் வேற்று மத தலைவர் ஒருவர் இவ்வாறு கஞ்சாவுடன் சிக்கி இருந்தால் அவரையும் இவ்வாறு விடுவிப்பார்களா என பொலீசாரின் பக்கச்சார்பு நிலையை பற்றி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

85Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*