யாழ் வைத்தியசாலையில் யுவதி செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்

யாழ் போதனா வைத்தியசாலையில், தாதிபோல் பாசாங்கு செய்த மர்மப் பெண் ஒருவர் வயோதிப பெண்ணிடம் நகைகளை அபகரித்து சென்ற சம்பவம் யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்துள்ளது.

Loading...

மூட்டு வாதத்தால் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக, அவர் வைத்தியசாலை 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண்ணை பின்தொடர்ந்த மர்மப் பெண் ஒருவர், அவரிடம் வந்து தான் வைத்தியசாலை தாதி எனவும் சத்திரசிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற் கொள்ள வெள்ளை நிற ஆடைகள் தேவை என தெரிவித்துள்ளார்.

தன்னுடன் துணைக்கு வந்த மகள் சென்று விட்டதாகவும், தன்னால் ஆடைகள் வாங்க முடியாது எனவும் வயோதிபப்பெண் தெரிவித்துள்ளார்.உடனே தான் சென்று ஆடை கள் வாங்கிவருவதாக வயோதிப பெண்ணிடம் பணத்தை பெற்று சென்று ஆடைகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார். பின்னர் சத்திர சிகிச்சைக்கு ஆயத்தமாகுமாறு கூறி யுள்ளார்.

பின்னர், தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது எனவும் அவற்றை கழற்றி தருமாறு கோரியுள்ளார். சத்திர சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் ஆபரணங்களை பெறு மாறு தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணை நம்பிய வயோதிப மாது தான் அணிந்திருந்த, சங்கிலி, மோதிரம், தோடு என்பவற்றை கழற்றி கொடுத்துள்ளார். அவற்றை பெற்றுக்கொண்டு அப்பெண் அவ் விடத்தை விட்டு சென்றுள்ளார்.

பல மணி நேரமாகியும் யாரும் அழைக்காத காரணத்தினால் அங்கிருந்தவர்களிடம் குறித்த வயோதிப மாது நடந்தவற்றை கூறியுள்ளார். அதன் பின்னர் தான் இவரை ஏமாற்றி நகைகளை பெற்று சென்ற விடயம் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் பொலிஸாருக்கு இவ் விடயம் தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*