வித்தியாசமான முறையில் வழங்கப்பட்ட வெசாக் தானம் (படங்கள்)

பண நோட்டுக்களை விநியோகித்து வெசாக் தானம் வழங்கிய அபூர்வமான சம்பவம் ஒன்று மாவனல்லைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இந்துனில் திசாநாயக்க தனது பெற்றோருக்கு புண்ணியம் தேடி இந்த தானத்தை வழங்கியுள்ளார். இவர் சுதந்திரக் கட்சியின் சார்பில் மாகாண சபையில் உறுப்பினராக கடமையாற்றியிருந்தார். அவரது வீட்டின் முன்பாக 9.30 மணியளவில் ஆரம்பமான பணநோட்டுக்கள் தானம் வழங்கும் நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தம் புதிய நூறு ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன், இந்துனில் திசாநாயக்க தனது கையாலேயே அனைவருக்கும் பணநோட்டுக்களை விநியோகித்து உள்ளார்.
0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*