ஹட்டன் – ருவான்புர பிரதேசபகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், மின் ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், பின்னர் வீடு எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், நகைகள், ஆடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be the first to comment