Loading...
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதானசாலைகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2,625 அன்னதான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உரிய சுகாதார பாதுகாப்பு முறையின் கீழ் அன்னதானங்களை ஏற்பாடு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
உரிய நடைமுறைகளை பின்பற்ற தவறும் ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Be the first to comment