விலகும் விக்கேஸ்வரன்? தடுமாறும் யாழ் குடாநாடு!

Loading...

தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, கிட்டத்தட்ட பேரவையிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், வடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்கேஸ்வரனும் அதிருந்து விலகிச்சென்றுவிடலாமென்ற அச்சம் பேரவை முக்கியஸ்தர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்து முதலமைச்சர் வெளியேறுகிறேன் என வெளிப்படையாக கூறாத நிலையிலும், அவர் வெளியேறலாமென பேரவையின் பிரமுகர்கள் பயப்பிடுகிறார்கள்.

அதன் எதிரொலிதான் யூன் மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள இளைஞர் மாநாடு!

இந்தியா செல்வதற்கு முன்னர் முதலமைச்சர் அனுப்பிய வாராந்த கேள்வி பதிலில், தனி அரசியல் கட்சியொன்றின் மூலம் அடுத்த அரசியல் பிரவேசத்திற்கான தெளிவான சமிக்ஞைகளை முதலமைச்சர் சி.வீ.விக்கேஸ்வரன் வெளியிட்டிருந்தார். இது பேரவைக்கு எதிர்பாராத அடியாக அமைந்து விட்டது.

பேரவையை மக்கள் மயப்பட்ட இயக்கமாக வளர்த்து, இதன்மூலம் அடுத்த மாகாணசபை தேர்தலை எதிர்கொள்வதென்பதே அதிலுள்ள பிரமுகர்களின் நோக்கம்.

ஆனால் முதலமைச்சர் அவர்களின் எதிர்பார்ப்பின்படி செயற்படாமல், தனி அரசியல் கட்சி பற்றிய சமிக்ஞையை வெளியிட்டு விட்டார்.

இந்த அறிவிப்பென்பது, கிட்டத்தட்ட பேரவைக்கு வெளியிலேயே நான் நிற்கிறேன் என்ற இன்னொரு செய்தியையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

வெளியேறிய முதலமைச்சர் சி.வீ.விக்கேஸ்வரனை மீளவும் பேரவைக்குள் இழுத்து வைத்து, பேரவையின் மூலம் அடுத்த மாகாணசபை தேர்தலை எதிர்கொள்வதே பேரவையிலுள்ளவர்களின் திட்டம்.

முதலமைச்சர் சி.வீ.விக்கேஸ்வரனை மீண்டும் பேரவைப்பக்கம் திருப்ப ஒரே வழி – பேரவைக்கும் கணிசமான மக்கள் ஆதரவு உள்ளதென்பதை காண்பிப்பதே. அதற்காகவே இந்த இளைஞர் அணி மாநாட்டை திட்டமிட்டுள்ளனர்.

அந்த மாநாட்டில் முதலமைச்சர் சி.வீ.விக்கேஸ்வரன் தனது அடுத்தபட்ட அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பார் என பேரவை முக்கியஸ்தர்ககளின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

38Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*