யாழ் நகரில் நேற்­றி­ரவு மர்மநபர்கள் நடந்திய தாக்குதல்களின் பின் வெளிவரும் உண்மைகள்

Loading...

யாழ். நக­ரில் நேற்­றி­ரவு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் மூவர் தாக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் பய­ணித்த வாக­ன­மும் அடித்து நொறுக்­கப்­பட்­டது.

சிறை அலு­வ­லர்­க­ளைத் தாக்­கி­னார் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் ஒரு­வர் சம்­பவ இடத்­தில் இருந்து பொலி­ஸா­ரால் அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

எனி­னும் இது தொடர்­பில் உத்­தி­யோ­க­பூர்வத் தக­வல்­கள் எத­னை­யும் சிறைச்­சாலை வட்­டா­ரங்­களோ பொலி­ஸாரோ தர மறுத்­து­விட்­ட­னர்.

சம்­ப­வம் யாழப்­பா­ணம் சத்­தி­ரச் சந்­திக்கு அண்­மித்த பகு­தி­யில் இரவு 8 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது. யாழ்ப்­பா­ணச் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் மூவரே தாக்­கப்­பட்­ட­னர்.

அவர்­கள் பய­ணித்­தது என்று கூறப்­ப­டும் வாக­னத்­தின் முன்­பக்­கக் கண்­ணாடி அடித்­துச் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகு­தி­யில் உள்ள மது­பான நிலை­யத்­தில் இருந்தே சிலர் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளைத் தாக்­கித் துரத்­திக் கொண்டு வந்­த­னர் என்று நேரில் பார்த்­த­வர்­கள் கூறி­னர்.

உத்­தி­யோ­கத்­தர்­கள் அவர்­க­ளு­டைய வாக­னங்­க­ளுக்­குள் ஏறி­ய ­போது வாக­னம் அடித்துச் சேத­மாக்­கப்­பட்­டது. சிறைச்­சாலை அலு­வ­லர்­கள் சிவில் உடை­யில் காணப்­பட்­ட­னர்.

சம்­ப­வத்தை அடுத்து பொலி­ஸார், சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள், சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் அந்த இடத்­ துக்கு வர­வ­ழைக்கப்­பட்­ட­னர். தாக்­கு­தல் நடத்­தி­ய­வர்­கள் தப்­பி­னர் என்று சம்­ப­வத்தை நேரில் கண்ட சிலர் கூறி­னர்.

பொலி­ஸார், படை­யி­னர், சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள், சிஐ­டி­யி­னர் எனப் பலர் அங்கு குழு­மி­யி­ருந்­த­னர். சிறிது நேரத்­தில் அங்­கி­ருந்த ஒரு­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார். அவர் வாக­னத்­தில் ஏற்­றிச் செல்­லப்­பட்­டார்.

“உணவு வாங்­கு­வதற்­கா­கச் சென்ற சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களை மது­பான நிலை­யத்­தில் இருந்து வந்­த­வர்­கள் அடித்­துள்­ள­னர். சம்­ப­வத்­தில் உத்­தி­யோ­கத்­தர்­கள் காய­ம­டைந்து யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­கள் பய­ணித்துத் தாக்­கப்­பட்ட வாக­ன­மும் பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய 36 வய­து­டைய ஒரு­வர் கைது செய்­யப்­ப­பட்­டுள்­ளார்’’ என்று பொலிஸ் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர்.

எனி­னும் தெல்­லிப்­ப­ழைக்­குச் சென்ற சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களே இடை­யில் மறித்­துத் தாக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று சிறைச்­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இந்­தத் தக­வல்­கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வழங்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

24Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*