48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றியது சவுதி அரேபியா !!

Loading...

சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதில் குறிப்பாக கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில்  சவுதிஅரேபியாவில் அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்த மரண தண்டனை நிறைவேற்றும் செயற்பாடும்  விசாரணைகளும் வருத்தம் அழுகிறது என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை குறைக்க வேண்டும் என்றும் நீதித்துறை நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்ட  சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் “கொலை வழக்கை தவிர  ஏனைய  குற்ற வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார். இவரது கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆனாலும் சவுதியில் கடந்த ஆண்டில் மட்டும் 150 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

64Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*