சாவின்றி இன்றும் வரை வாழ்ந்து வரும் மாகான் யார் தெரியுமா??

ஆதி அந்­தம் இல்­லாத அரும்­பெ­ரும் சிறப்­பு­டைய, இந்து மதத்­தில் ஊடு­று­கின்ற ஈடு இணை­யற்ற முனி­வர்­க­ளில் ஒருவரே வியா­சர்.

Loading...

பக­வான் விஸ்­ணு­வின் ஆதி அவ­தா­ர­மாக இந்த வியா­சர் கரு­தப்­ப­டு­கின்­றார்.

பரா­சர முனி­வ­ருக்­கும், சத்­தி­ய­வ­திக்­கும் மக­னா­கப் பிறந்­த­வர் வியா­சர். இன்­றும் சிரஞ்­சீ­வி­க­ளில் ஒரு­வ­ராக சாவில்லா­மல் வாழ்ந்து வரு­கின்­றார்.

இத்­தகு சிறப்­பு­டைய வியா­சர் ஆற்­றிய சேவை­கள் எண்­ணற்­றவை ஆகும்.

வேதங்­களை வகுத்­தல்

இந்­து­ம­தம் தனின் பொது­நூ­லாக விளங்­கும் வேதங்­களை நான்­காக வகுத்­தவர் வியா­ச­ரே­யா­வார்.

அத­னால்­தான் அன்று முதல் வேத வியா­சர் எனும் நாமம் பெற்­றார்.

எம் பெரு­மான் சிவன் வாயி­லாக தோன்­றிய வேதங்­களை ஒன்று திரட்டி இருக்கு வேதம், யசூர் வேதம், சாம வேதம், அதர்­வன வேதம் எனும் நான்கு பிரி­வு­க­ளாக வகுத்­தல் செய்­தார் வியா­சர்.

புரா­ணங்­களை பாகு­பாடு செய்­தல்

இந்து மதத்­தின் பெமை­க­ளை­யும், சிறப்­பி­னை­யும் கதை வழி­யாக எடுத்­து­ரைக்­கின்ற புரா­ணங்­களை ‘மகா­பு­ரா­ணங்­கள்’ எனும் வகைப்­பாட்­டில் வகுத்­தல் செய்­தார் வியா­சர்.

அதுவே ‘பதி­னெண் புரா­ணங்­கள்’ எனப்­ப­டு­கின்­றன.

அத்­தகு மகா­பு­ரா­ணங்­கள் பதி­னெட்­டில், சிவ­பு­ரா­ணங்­கள் பத்து, விஸ்ணு புரா­ணம் நான்கு, பிரம்ம புரா­ணம் இரண்டு, சூரிய புரா­ணம் ஒன்று, அக்னி புரா­ணம் ஒன்று என் றவாறு அமை­வு­று­கின்­றன.

இவை தவிர ‘உப­ம­கா­பு­ரா­ணங்­கள்’ என­வும் பதி­னெட்டு புரா­ணங்­கள் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றை­யும் வகுத்­தல் செய்­தார் வியா­சர்.

மகா­பா­ர­தத்­தினை உரைத்­தல் செய்­தல்

ஐந்­தாம் வேதம் எனப்­ப­டும் மகா­பா­ர­தத்­தினை விநா­ய­கர் துணை கொண்டு வியா­சரே இயற்­றி­ய­ரு­ளி­னார்.

மகா­பா­ர­தம் எனும் ஈடு இணை­யில்­லாத பெரும் காப்­பி­யம் தனை விநா­ய­கர் துணை கொண்டு நூலாக அரு­ளிச் செய்த பெருமை வியா­ச­ரையே சாரும்.

மகா­பா­ர­தத்தை எழு­தும் படி விநா­ய­க­ரி­டம் சென்று வியா­சர் வேண்ட, அதற்கு விநா­ய­கர், ஒரு நிபந்­தனை விதித்­தார்.

அது யாதெ­னில், தான் மகா­பா­ர­தத்தை எழு­தத் தொடங்­கி­ய­தும் இடை­யில் நிறுத்­தா­மல் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் என்­ப­தா­கும்.

அதற்கு உடன்­பட்ட வியா­சர் உடன் தானும் ஒரு நிபந்­த­னையை விநா­ய­க­ரி­டம் சமர்ப்­பித்­தார். தான் கூறு­கின்ற பாடல்­களை பொருள் உணர்த்தும் வகையில் தாம் எழுத வேண்­டும் என்­பதே அது­வா­கும். அதற்கு விநா­ய­க­ரும் உடன்­பட அவர்­கள் இரு­வ­ரின் கூட்டு முயற்­சி­யில் மகா­பா­ர­தம் எனும் இதி­கா­சம் உரு­வாக்­கப்­பட்­டது.

மகா­பா­ரதக் கதை­யில் இழை­யோ­டும் வியா­சர்

மகா­பா­ரத்­தில் தானும் ஒரு கதா­பாத்­தி­ர­மாக இழை­யோ­டி­யி­ருக்­கின்­றார் வியா­சர். மகா­பா­ரத்­தில், குரு வம்­சத்­தின் வம்ச விருத்­தி ­யினை ஏற்­ப­டுத்­தி­ய­வர் வியா­சரே. தன் தாய் சத்­தி­ய­வ­தி­யின் வேண்­டு­த­லுக்கு அமைய அந்­தச் செயலை அவர் புரிந்­தார். அதன்­படி திரு­த­ராட்­டி­னன், பாண்டு, விது­ரர் ஆகி­யோர் வியா­சர் வாயி­லாக பிறந்­த­னர் என்­ப­தும் மகா­பா­ரதத்­தில் வெளிப்­ப­டும் கருத்­தா­கும்.

இது மட்­டு­மன்றி, காந்­தாரி ஒரு முறை செய்த பெரும் தவ­றி­னால் சிதை­வுண்ட அவ­ளது கரு­வினை தன் சக்­தி­யி­னால் நூற்­றி­யொரு பாகங்­க­ளாக பிரித்து அவற்­றிற்கு உயிர் கொடுத்து அவர்­களை நில­வு­ல­கில் பிறப்­ப­தற்கு வழி­வகை செய்­தார். அவர்­களே கௌர­வர்­கள் எனப்­ப­டு­கின்­ற­னர்.

மேலும், ஒரு முறை பாஞ்­சாலி பஞ்ச பாண்­ட­வர்­க­ளின் மனை­வி­யாக வர வேண்­டிய சூழ் நிலை­யில் அந்­தக் குழப்­பத்­தினை தீர்த்து வைத்­த­வ­ரும் வியா­சரே. மேலும், பாண்­ட­வர்­கள் மற்­றும் பாஞ்­சா­லிக்கு இடை­யி­லான இல்­லற வாழ்க்­கை­யினை வகுத்து அதன்­படி அவர்­களை நல் வழிப்­ப­டுத்­தி­ய­வ­ரும் வியா­ச­ரே­யா­வார்.

இது மட்­டு­மன்றி, மகா­பா­ரத போரா­னது நிகழ இருக்­கும் சம­யம் அஸ்­தி­னா­பு­ரம் வந்த வியா­சர் அங்கு அர­சன் திரு­த­ராட்­டி­ன­னி­டம், நிகழ இருக்­கும் போரி­னைக் காண தாம் விரும்­பி­னால் நான் தமக்கு ஞானக் கண் பார்­வை­யினை அளிப்­ப­தாகக் கூறி­னார். ஆனால் திரு­த­ராட்­டி­னனோ அதனை மறுத்து தனக்கு பதில் தன் ஆலோ­ச­கன் சஞ்­ச­ய­னுக்கு அதனை வழங்­கும்படி வேண்­டி­னான். வியா­ச­ரும் அவ்­வாறே திவ்ய திருஸ்­டி­யினை சஞ்­ச­ய­னுக்கு கொடுத்­த­ருளி அங்­கி­ருந்து புறப்­பட்­டார்.

மகா­பா­ரதப் போரின் இறு­திக் கட்­டத்­தில் அர்ச்­சு­ன­னும் அஸ்­வத்­தா­ம­னும் போர் செய்­யும் போது இரு­வ­ரும் பிரம்­மாஸ்­தி­ரத்­தினை பிர­யோ­கிக்­கின்­ற­னர். இரண்டு பிரம்­மாஸ்­தி ­ரங்­கள் மோதும் போது அது உலக அழி­விற்கே வழி வகுக்­கும் என்­பதை உணர்த்த வியா­சர் உடன் அவ்­வி­டம் தோன்றி அவர்­கள் இரு­வ­ரை­யும் அஸ்­தி­ரங்­களை திரும்­பிப் பெற்று உலக நலனை காக்­கும் படி அறி­வு­றுத்­தி­னார்.

ஸ்ரீமத் பாக­வ­தம், விஸ்ணு சகஸ்ர நாமம் என்­ப­வற்றை அரு­ளிச் செய்­தல்

விஸ்­ணு­வின் பெருமை கூறும் புரா­ணங்­க­ளில் ஒன்­றான ஸ்ரீமத் பாக­வத புரா­ணத்தை இயற்­றி­ய­வ­ரும் வியா­சரே. விஸ்­ணு­வின் அவ­தா­ரச் சிறப்­புக்­கள், விஸ்­ணு­வின் மகி­மை­கள், விஸ்ணு பக்­தி­யின் மேன்மை என்­ப­வற்றை உள்ளடக்­கி­ய­தாக அரும் பெரும் புரா­ண­மாக ஸ்ரீமத் பாக­வத புரா­ணத்தை இயற்­றி­னார்.

மேலும், விஸ்­ணு­வின் சிறப்­பு­ரைக்­கும் விஸ்ணு சகஸ்ர நாமத்­தினை அரு­ளிச் செய்­த­வ­ரும் வியா­சரே. மகா­பா­ரத்­தின் ஒரு பகு­தி­யாக விளங்­கு­வது இது­வா­கும். மகா­பா­ர­தப் போரா­னது முடி­வ­டைந்த பின் அம்­புப் படுக்­கை­யில் இருந்து பிதா­ம­கர் பீஷ்­ம­ரி­டம் பாண்­ட­வர்­க­ளில் மூத்­த­வ­ரான தரு­மன் இறை­வ­னது இயல்­பு­கள் பற்றிப் பல சந்­தே­கங்­களை வினாக்­க­ளாக கேட்­டார்.

அதற்கு பீஸ்­மர் அளித்த பதி­லு­ரை­களைத் தொகுத்து விஸ்ணு சகஸ்ர நாம­மாக வகுத்­தல் செய்­தார் வேத வியா­சர். இது மட்­டு­மன்றி பிரம்­ம­சூத்­தி­ரம் எனும் நூலை இயற்­றி­ய­வ­ரும் இவரே.

இவ்­வாறு ஒப்­பற்ற பல செயல்­களை செய்­த­ரு­ளிய வியா­சர் ஓர் ஈடு இணை­யில்­லாத முனி­வ­ராக, எமது இதி­காச புரா­ணங்­க­ளில் ஊடு­கின்ற தன்­மை­யி­னைக் கண்டு கொள்­ள­லாம். எமது இந்­து­ம­தத்­திற்கு எண்­ணற்ற செயல்­களை ஆற்­றிய வியா­ச­ரின் பெரு­மை­யும், சிறப்­பும் காலம் உள்ள வரை நிலைத்­தி­ருக்­கும்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*