இலங்கையில் திடீரென தாழிறங்கி நிலம்; பதறியடித்து ஓடிய மக்கள்

இலங்கையின் மலைநாட்டு பகுதியில் திடீரென நிலம் தாழிறங்கியமையால், அச்சமடைந்த மக்கள் பதறியடித்து ஓடியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தின் நிலப்பரப்பு பகுதியே இவ்வாறு திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சம் காரணமாக உடனடியாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்ததாக, பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தாழிறக்கம் காரணமாக எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்பதுடன். மழை பெய்யாத நிலையில் இவ்வாறு தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமைக்காக காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், சம்பவ இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகத்திற்கமைய அந்த இடத்தில் உள்ள மக்களை அங்கிருந்து அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிலைய முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*