கல்குடா வலயத்தில் இரண்டாவது தடவையும் முதலிடம் பெற்ற இந்துக்கல்லூரி

2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பெறுபேறுகளின் படி வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

புதன்கிழமை நள்ளிரவு இணையத்தளங்களில் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இருந்து ஒன்பது ஏ சித்திகளை ஏழு மாணவர்களும்¸ எட்டு ஏ சித்திகளை மூன்று மாணவர்களும்¸ ஏழு ஏ சித்திகளை ஏழு மாணவர்களும் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் முதலாம் இடத்தினை வாழைச்சேனை இந்துக்கல்லூரி பெற்றுக் கொண்டுள்ளதுடன்¸ கடந்த வருடமும் ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்தி பெற்று கல்குடா வலயத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

அந்த வகையில் இம்முறை வெளியான பெறுபேற்றுகளின் அடிப்படையில் அ.அர்னோல்ட் கிரேப்பித்¸ ரி.துசாந்தன்¸ ரி.பிருந்தாபன்¸ ப.வைசாலி¸ ரி.அபிசனா¸ கே.ரக்ஷனா¸ ஜே.அனுசதுர்திகா ஆகிய மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கும்¸ கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பெருமை சேர்த்த மாணவர்கள்¸ கல்வி கற்பித்த ஆசிரியர்கள்¸ பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் மேலும் தெரிவித்துள்ளார்.

62Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*