முஸ்லிம்களை சமாளிக்க முதலமைச்சர் விக்கி சொன்ன வில்லங்கமான ஐடியா! சாத்தியமாகுமா?

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் சில வாரங்களின் முன்னர் திருகோணமலையில் ஒரு கூட்டம் நடந்தது.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

இதில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வில்லங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு பெண்ணும் பல ஆண்களை திருமணம் செய்வதன் மூலம், தமிழர்களின் சனத்தொகையை பெருக்கலாமென்பதே அந்த யோசனை.

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர், முதலமைச்சரிடம் கேள்வியொன்றை எழுப்பினார்.

“தமிழர்களின் பாரம்பரிய பூமி திருகோணமலை என்கிறீர்கள். ஆனால் முஸ்லிம்கள் இங்கு பெருகி, தமிழர் நிலங்களையெல்லாம் ஆக்கிரமிக்கிறார்கள். தமிழர்கள் சிறுபான்மையினராகி விட்டனர். இதையெல்லாம் நீங்கள் கவனிப்பதில்லையே“ என.

முதலமைச்சர் இப்படி பதிலளித்தார்- “முஸ்லீம் சனத்தொகை வேகமாக பெருகி செல்வதுதான் இதற்கு காரணம். நீங்களும் அவர்கள் பாணியிலேயே அவர்களை எதிர்கொள்ளலாம். ஒருவர் பல தார மணம் புரியலாம். அல்லது, புராணத்தில் சொல்லப்பட்டதை போல- பாஞ்சாலியை போல- ஒருத்தி பலரை மணக்கலாம்“ என சிரித்தபடி கூறினார்.

20Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*