அம்மா கடவுளிடம்! அப்பா சிறைக்குள்! பிள்ளைகளின் பதைபதைக்கும் நிமிடங்கள்…

அன்­டைக்கு ஒரு புதன்­கி­ழமை. காலமை 11.42 மணி­யி­ருக்­கும்! கொழும்பு 7ஆம் இலக்க உயர் நீதி மன்­றத்­திலை வைச்­சுத் தீர்ப்பு. 94குற்­றச்­சாட்­டுக்­கள் என்­மீது. அதில் 93குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆயுள்­தண்­ட­னை­கள்.

94ஆவது குற்­றச் சாட்­டுக்­குப் பத்து வரு­டச் சிறை. ஆக, ஆயி­ரத்­திச் சொச்ச வரு­சங்­கள் சிறை என்று தீர்ப்­புச் சொன்­னார்­கள்.

வெளியே என்ன நம்பி இருக்­கின்ற மனைவி, பிள்­ளை­க­ளின் நிலை? அவர்­க­ளோடு சேர்ந்து வாழ­லாம் எண்ட நம்­பிக்­கை­யோட காத்­தி­ருந்து, அவ்­வ­ளவு கால­மும் தண்­ட­னை­யத் தூசாக அனு­ப­விச்­சனே…?’

2008ஆம் ஆண்­டி­லி­ருந்து சிறை வாழ்க்கை. கிட்­டத்­தட்ட பத்து வரு­டங்­கள் கழித்து வெளி­வந்த தீர்ப்பு அவ­னைப் பொசுக்­கியே விட்­டது.

அவன் சாகும் வரை மட்­டு­மல்ல இனி எத்­தனை பிற­வி­க­ளெ­டுத்­தா­லும் சிறையே தயவு என்­றி­ருக்­கி­றது சட்­டத்­தின் தீர்ப்பு. ஆனால் இதை­வி­ட­வும் பல கொடுந்­து­யர்­கள் தன்­னைக் குறி­பார்த்­துக் காத்­தி­ருந்­ததை அவன் அறி­ய­வில்லை.

‘மக­சின் சிறைச்­சா­லை­தான். அண்­டைக்­குக் காலமை பத்து மணி­யி­ருக்­கும். எஸ்.எம். பிராஞ்­சிலை இருந்து இன்ஞ்­சார்ச் ஒருத்­தர் வந்­தார்.

யோக­ரா­ணின்ர மனி­சன் ஆரு? எண்டு கேட்­டார். நான் தான் எண்டு சொன்­னன். நேற்­றைய தினம் உங்­கட மனைவி கால­மா­கி­விட்­டார். கிளி­நெச்சி பொலிஸ் ஸ்ரெச­னிலை இருந்து பக்ஸ் வந்­தி­ருக்கு’ என்று சொல்லி முடிச்­சார். தீர்ப்பை நினைச்சு நினைச்சு அழுது முடிக்­கேல்லை. எனது மனை­வி­யும்…? (அழு­கை­யைத் தவிர அவ­ரி­டம் வேறு எது­வும் இல்­லைத்­தானே).

‘மனைவி மக்­க­ளோடு சேர­லாம் என்­றி­ருந்த எனக்கு இப்­போது என் மனை­வி­யும் இல்லை. அவ­ளைக் கைபி­டித்­தது முதல்… (அழுகை அதி­க­மா­கி­யது). அவ­ளோடு வாழக் கிடைக்­கா­மல் உயிர் வாழ­வேண்­டி­யி­ருக்­கி­றதே. அழு­வ­தற்கு நேரம் தேடு­வதா? மடி­யில் வந்து அமர்ந்து எனது தயவை வேண்­டிப் பரி­த­விக்­கும் என்ர பிள்­ளைக்­குப் பதில் சொல்­லு­றதா?’

ஒரு மனி­தன் எத்­தனை துய­ரங்­க­ளைத்­தான் தாங்­கு­வது? அவ­னைத் துண்டு துண்­டாக வெட்­டிப் ‘பங்கு’ போட்­டுக்­கொண்­டி­ருக்க அதை அவனே பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றான்.

அவ­னி­லி­ருந்து கிழித்­தெ­ டுக்­கப்­ப­டும் தசை­க­ளில் உயிர்த்­து­டிப்­பும், குரு­திச் சூடும் இன்­ன­மும் இருந்­து­கொண்டே இருக்­கி­றது. துர­திஷ்­ட­சா­லி ­யான அவன் தான் சதைத் துண்­டு­க­ளாக்­கப்­ப­டும் வலியை மறந்து மனை­வியை இழந்து, மக­ளின் பரி­த­விப்­புக்­கும் பதில் சொல்ல முடி­யா­மல் நட்­டாற்­றில் நிற்­கி­றான்.

இதுவே அர­சி­யல் கைதி­யாக்­கப்­பட்­டி­ருக்­கும் ஆனந்­த­சு­தா­க­ரின் நிலை. பெய­ரில் மட்­டும் மகிழ்ச்சி ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது.

ஆனால் மலை­போல் இறு­மாப்­பு­டன் உயர்ந்து நிற்­கின்­றன அவ­னைச் சூழ்ந்து கௌவிக்­கொள்­ளப்­போ­கின்ற கொடுந்­து­யர்­கள்.

‘2017ஆம் ஆண்டு நவம்­பர் மாசம் 8ஆம் திகதி. அண்­டைக்­குத்­தான் என்­னிலை சுமத்­தப்­பட்ட குற்­றங்­க­ளுக்­கான அந்­தத் தீர்ப்­பைச் சொன்­னார்­கள். கேட்ட உட­னேயே நான் இடிஞ்சு பேனன்… மனிசி, பிள்­ளை­ய­ளைப்­போய்ப் பாக்­க­லாம் எண்­டால்…’

2008ஆம் ஆண்டு 4ஆம் மாதம்; 25ஆம் திகதி. இரவு 9.15அள­வில் தேல்ன்­தற எனு­மி­டத்­தில் வைத்­துப் பிலி­யந்­த­லைப் பொலி­ஸா­ரால் அவர் கைது செய்­யப்­பட்­ட­போது ஒன்­றன்­மேல் ஒன்­றாக அடுத்­த­டுத்­துத் தன்னை ஆட்­கொள்­ளப்­போ­கும் இத்­த­கைய ரணங்­க­ளைப் பற்­றிச் சுதா­கர் அறிந்­தி­ருக்க வாய்ப்­பில்­லைத் தான்.

‘நாங்­கள் பேசித்­தான் கலி­ய­ணம் முடிச்­ச­னாங்­கள். வரு­மா­னம் குறை­வெண்­டா­லும் வாழ்க்கை பரு­வா­யில்­லா­மல் சந்­தோ­ச­மாப் போய்க் கொண்­டி­ருந்­துது. நல்­ல­தொரு மனிசி எனக்­குக் கிடைச்­சாள். கஸ்ர, துன்­பம் பாக்­காது தானும் உழைக்­கக் கூடி­ய­வள். கனி பிறந்து (கனி­த­ரன்) அவ­னுக்கு ஒரு வயது நடந்­து­கொண்­டி­ருக்­க­ வே­ணும். சகி அப்ப கைக்­கு­ழந்தை(சங்­கீதா).

அவள் பிறந்த அதே மாதம்­ தான். பிறந்து ஒரு ரெண்டு கிழமை கழிச்சு என்னைப் பிடிச்­சது. அதிலை இருந்து சிறை வாழ்க்கை தான். கல்­கி­சைச் சிறை­யிலை இருக்­கேக்க வாணி(யோக­ராணி), சகி­யை­யும் தூக்­கிக் கொண்டு என்­னப் பாக்க வருவா…. என்ர பிள்­ளை­யளை இப்­பிடி இருந்­திட்டு இருந்­திட்­டுப் பாக்­கேக்க சரி­யான சந்­தோ­சமா இருக்­கும்.

விசா­ர­ணை­யும் சிறைக்­குள்ள இருக்­கி­ற­துமா வாழ்க்கை ஓடிச்­சுது. ஆனா இடை­யிலை ஒரு சம்­ப­வம் நடந்­தது. 2008ஆம் ஆண்டு. என்­னைப் பிடிச்­சுக் கொஞ்ச நாள் கழிய. ஜுலை மாசம்.

19ஆம் திகதி இரவு ஏழு மணி­யி­ருக்­கும். ஒரு 120பக்­கம் வரை­யில இருக்­கிற ஒற்­றை­யில கையெ­ழுத்து வாங்­கிச்­சி­னம். 21ஆம் திகதி றிமைன் பண்­ணு­ற­தாச் சொல்­லிச்­சி­னம். பிற­கு­தான் கோட்­சிலை நீதி­பதி சொன்­னார்.

இந்­தக் குற்­றத்தை நிரூ­பிக்­கக் கூடிய வலு­வான சாட்­சி­கள் இல்­லாத பட்­சத்­தில் என்­னு­டைய குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை வைச்சு எனக்­குத் தண்­டனை அளிப்­ப­தாக…? நான் வரு­வன், வரு­வன் என்று பாத்­துக்­கொண்­டி­ருந்த வாணிக்கு நான் என்­னத்­தச் சொல்­லு­றது…? அவ­ளுக்கு இதைப் பற்றி எதை­யுமே நான் சொல்­லேல்லை… நான் ஜெயி­லுக்க வந்த காலத்­திலை இருந்து அவள் வருத்­தக்­கா­றி­யாப் போயிற்­றாள்.

எத்­தி­னை­யோ­த­ரம் ஹொஸ்­பி­ரல்ல அவ­சர சிகிச்­சைப் பிரி­விலை கிடந்­தாள். இப்­பிடி இடிஞ்சு போயி­ருக்­கிற அவ­ளுக்கு எப்­பிடி இந்­தத் தண்­ட­ணை­யைப் பற்­றிச் சொல்­லு­றது…? சொன்­னால் அவள் தாங்க மாட்­டாள் எண்­டு­றது எனக்கு நிச்­ச­ய­மாத் தெரி­யும். மறைச்சு மறைச்­சுக் கட­சியா அவ­ளுக்கு அது தெரிஞ்­சு­போச்­சுது… சாகி­ற­துக்கு இரு­பது நாளுக்கு முதல்­தான் எனக்­குத் தீர்ப்­பா­கின விச­யம் தெரிஞ்­சி­ருக்கு… அவள் அண்­டைக்கே செத்­துப்­போ­யிற்­றாள்…’

‘15ஆம்­தி­கிதி… 16ஆம் திக­தி­தான் வந்து சொன்­னார்­கள்… 17ஆம் திகதி இர­வு­போலை மக­சி­னி­லை­யி­ருந்து கொண்­டு ­போய்ச்­சி­னம். யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­ லைக்கு… 18ஆம் திகதி வீட்டை கூட்­டிக் கொண்­டு­போய்ச்­சி­னம்… நான் வரு­வன் வரு­வன் எண்டு பாத்­துக் காத்­தி­ருந்த மனிசி கண்­ணுக்கு முன்­னால செத்­துப்­ போய்க்­கி­டக்கு… கையா­லா­காத பாவி­யான என்­னால என்ன செய்ய முடி­யும்…? ஏரா­ளம் சடங்­கு­கள் செய்­திச்­சி­னம்.

என்­னை­யும் செய்­யச் சொல்­லிச்­சி­னம். மகன்­தான் எல்­லா­மும் செய்­தான். நான் பாவி­யா­கப் பாத்­துக்­கொண்­டி­ருந்­தன். மகள் வந்து மடி­யிலை ஏறி இருந்­திற்­றாள். அம்மா இல்­லை­யெண்டு கவ­லைப் படக்­கூ­டாது அப்பா இருக்­கி­றன் எண்டு எப்­பி­டிப் பிள்­ளைக்­குச் சொல்­லு­றது…? மக­ளோடை என்­னத்­தைக் கதைக்­கி­றது…? மூண்டு மணித்­தி­யா­ல­யம் கழிஞ்­சி­ருக்­கும்…! கூட்­டிக்­கொண்டு வந்த பொலிஸ்­கா­ரர் வாக­னத்­திலை ஏறச்­சொல்­லிச்­சி­னம்.

மக­ளும் பின்­னாலை வந்து ஏறிற்­றாள். அவ­ளைக் கட்­டி­ய­ணைச்­சுக் கொஞ்­சி­னன். அப்பா திரும்பி வந்­தி­ரு­வன் குழப்­படி செய்­யா­மப் படிக்­க­வே­ணும். அம்மா இல்­லை­யெண்டு கவ­லைப்­ப­டக்­கூ­டாது எண்டு சொல்லி அவளை இறக்கி விட்­டிட்டு வந்­தன். அம்­மம்மா, அப்­பம்­மாக்­க­ளிட்டை என்ர பிள்­ளை­ய­ளைக் கவ­ன­மாப் பாருங்கோ எண்­டும் சொல்­லிப்­போட்டு வந்­தன்…’

இப்­போது நான்கு சுவர்­க­ளுக்கு நடு­வில் சுதா­கர்… என்ன செய்­து­கொண்டு…? சிந்­த­னை­கள் எப்­ப­டி­யி­ருக்­கும்…? கற்­ப­னைக்­கும் எட்­டாத அந்த வலி­க­ளின் குவி­யலை எப்­ப­டித்­தான் எம்­மால் சொல்ல முடி­யும்…?

தனது தந்­தை­யின் பெயரை அழுத்­த­மாக எழு­திக்­காட்­டி­னாள் சங்­கீதா. ‘உங்­க­ளுக்கு அப்­பாவை எப்­போது தெரி­யும்?’ எனக் கேட்­ட­தும் துரு துரு­வென வீட்­டுக்­குள் ஓடிய அந்­தப் பிஞ்சு சென்ற வேகத்­தி­லேயே ஒரு போட்­டோ­வைத் தூக்­கிக் கொண்டு திரும்பி வந்­தது.

அதில் ஆனந்­த­சு­தா­க­ரும் மனைவி யோக­ரா­ணி­யும் நின்­றி­ருந்­தார்­கள். அவர்­க­ளு­டைய திரு­மண நிகழ்­வு­க­ளின் பிற்­பா­டு­க­ளில் எடுக்­கப்­பட்ட ஒளிப்­ப­டம்­போல் தெரிந்­தது. அதைக் காட்­டிய பிள்ளை, ‘இந்­தப் படத்­திலை தான் அப்­பாவை அம்மா முதல் முத­லில் எனக்­குக் காட்­டி­னவா. அது­வ­ரைக்­கும் எனக்கு அப்­பா­வைத் தெரி­யாது. அப்பா எப்­பி­டி­யி­ருப்­பார்? எண்டு அம்­மாட்­டக் கேட்ட, அவர் நல்ல வெள்­ளையா இருப்­பார், வடி­வான அப்பா எண்டு சொல்­லுவா, பிறகு சிறைச்­சா­லை­யி­லை­யும், நீதி­மன்­றத்­தி­லை­யும் போகேக்­க­தான் அப்­பா­வக் கண்­ட­னான்.

அப்­பா­வுக்­குப் புட்­டும் நெத்­த­லிக் கரு­வ­டும் எண்­டால் சரி­யான விருப்­பம்… பாக்­கப்­போ­கேக்க அம்மா செய்­து­கொண்டு வருவா, இப்ப அம்­மா­வும் இல்ல… அப்­பா­வும் வந்­திற்­றுப் போட்­டார்’ என்று ஒரே மூச்­சில் சொல்லி முடித்­தது அந்­தப் பிஞ்சு. அம்­மம்­மா­வின் அரு­கில்­போய் அண்­ணன் தஞ்­ச­மை­டைந்­தி­ருக்க சங்­கீ­தா­வும் அவர் அரு­கில் போய் நின்று கொண்­டாள்.

கொழுந்து விட்­டெ­ரி­யும் வெயில் கனன்­று­கொண்­டி­ருந்­தது. விழுந்­தொ­ழும்­பிச் செல்­லும் வாக­னங்­க­ளின் போக்­கில் எழுந்த தூசிப்­ப­ட­ லங்­கள் அந்த வீதி­யெங்­கும் தொங்­க­வி­டப்­பட்­டி­ருந்த வாணி­யின் உரு­வப்­ப­டத்­தில் படிந்து கவலை காட்­டின.

கண­வ­னைக் கைது சென்று கொண்டு சென்­ற­தி­லி­ருந்து பெரும் சிர­மங்­க ­ளுக்கு மத்­தி­யி­லும் தனி ஒரு பெண்­ணா­கத் தனது குடும்­பத்­தைப் தாங்கி நின்று அவள் நிகழ்த்­திய போராட்­டங்­கள் அவ­ளு­டைய மூச்­ச­டங்­கிப்­போ­யும்­கூட அவ­ளுக்கு நிம்­ம­தி­யைக் கொடுக்­க­வில்லை.

வாணி­யைப்­போன்ற இன்­னும் பல பெண்­க­ளு­டைய உயிர்­கள் கரு­கிக் கொண்­டி­ருக்­கும் வாச­னை­க­ளை­யும் காற்­றுச் சுமக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது.

அப்­போது காற்­றுக் கன­ம­டைந்து கண்­ணீர்­கூ­டச் சிந்­த­லாம்… அம்மா கட­வு­ளி­டம் சென்­று­விட, அப்பா அர­சின் கைக­ளில் இறு­ கிப்­போ­யி­ருக்க, பரந்­து­கி­டக்­கின்ற கால வெளியை வெறித்­துப் பார்த்­த­படி நிற்­கி­றார்­கள் அண்­ண­னும் தங்­கை­யும்.

140Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*