சிறு­பான்­மை­யி­னரைத் தாக்­கி­னால்  சிங்­கள மக்­க­ளுக்­குச் சந்­தோ­சமே தேர்­தல்­கள் ஆணை­யா­ளர்  மகிந்த தேசப்­பி­ரிய கருத்து

கண்­டி­யி­லும், அம்­பா­றை­யி­லும் நடை­பெற்ற இனக் கல­வ­ரங்­க­ளால் சிங்­கள மக்­கள் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள் என்­ப­தில் எந்த உண்மை­யும் இல்லை. அதற்கு மாறாக சிறு­பான்­மை­யி­னர் மீதான தாக்­கு­தல்­க­ளால் அவர்­கள் சந்­தோ­சப்­ப­டு­கின்­றார்­கள்.

இவ்­வாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தார்.

இன ஒற்­றுமை என்ற தலைப்­பில் கடந்த சனிக் கிழமை கொழும்­பில் நடந்த கலந்­து­ரை­யா­டல் ஒன்­றி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

1983ஆம் ஆண்­டில் தமிழ் மக்­கள் தாக்­கப்­பட்ட சந்­தர்­பத்­தி­லும் சிங்­கள மக்­கள் மகிழ்ச்­சி­ய­டைந்­த­னர். சில ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னரே அதை­யிட்­டுக் கவ­லைப்­பட்­ட­னர். அர­பிய கலா­சா­ரத்தை இலங்கை முஸ்­லிம்­கள் பின்­பற்­று­வ­தால் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு சமு­தா­யத்­துக்­குள் அவர்­கள் தள்­ளப்­ப­டு­கின்­ற­னர் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

முஸ்­லிம்­க­ளால் நடத்­தப்­ப­டும் சிறு பாட­சா­லை­க­ளுக்கே முஸ்­லிம் பெண் பிள்­ளை­கள் செல்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

நாட்­டிலோ உல­கத்­திலோ கலப்­பின்றி தனி­யாக எந்­த­வொரு சமூ­க­மும் இல்­லை­யென்­பதை சிங்­க­ள­வர்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்­றேன். கஜபா அர­ச­னால் இலங்­கைக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட 14 ஆயி­ரம் பேரில் ஒரு­வ­ரா­வது இங்­குள்ள ஒரு­வ­ரின் அப்­பா­வாகஇல்­லையா என்­றும் அவர் கேள்வி எழுப்­பி­னார்.

முஸ்­லிம்­களை மரக்­க­லையா அல்­லது ஹம்­பையா என அழைப்­ப­தற்­குக் கார­ணம் அது அவர்­கள் பய­ணம் செய்து இலங்­கைக்கு வந்த இரு கப்­பல்­க­ளின் பெயர்­களே தவிர வேறு எந்­தக் கார­ண­மும் இல்லை. அப்­ப­டி­யா­னால் விஜ­ய­மன்­னன் கூட அப்­ப­டி­யொரு மரக்­க­லத்­தில் வந்­த­வன்­தான் என்­றும் குறிப்­பிட்­டார்.

முஸ்­லிம்­க­ளால் நடத்­தப்­ப­டும் நிறு­வ­னத்­தில் ஒரு பௌத்த மத­கு­ருவை கற்­பிக்க அனு­ம­திப்­பீர்­களா என்­றும் முஸ்­லிம்­க­ளி­டம் மகிந்த தேசப்­பி­ரிய சவால் விடுத்­தார்.

50Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*