கண்டி வன்முறையில் இடம் பெற்ற கொலை? பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!?

கண்டியில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வன்முறையின்போது உயிரிழந்தவர் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளதாக லங்காதீப இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Loading...

குறித்த சம்பவம் கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த ஊடகம், இது திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதுவதாகவும் தகவல் கூறியுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

கடந்த ஆறாம் நாள் கண்டியின் பல்லேகல்ல கென்கல்ல பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளின்போது முஸ்லிம்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. இவ்வாறு எரிக்கப்பட்ட வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

தனது பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோரைக் காப்பாற்றிவிட்டே இவர் வீட்டினுள் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

எனினும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் சில தகவல்களைக் கசியவிட்டுள்ளதாக லங்காதீப குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான கண்காணிப்புக் காணொளிப் பதிவுகள் பரிசோதிக்கப்படவுள்ளதாகவும் அது தொடர்பான விரிவான அறிக்கையிடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த இளைஞர் விசேட தேவையுடைய ஒரு நபர் என்பதுடன் அவர் அதிகமான புகையைச் சுவாசித்தமையினால்தான் உயிரிழக்க நேரிட்டதாக சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறாயின் புகையினைச் செலுத்தி திட்டமிட்டே கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*