கண்டியில் என்னதான் நடக்கிறது? கவச வாகனங்களிலிருந்து குதிக்கும் இராணுவம்

இலங்கையின் மத்திய மாகாணத்தின் தலைநகர் மாவட்டமான கண்டியில் பல பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

ஆயிரக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோருக்கும் மேலதிகமாக இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு யுத்த சூனியப் பிரதேசமாக கண்டி நகரம் காணப்படுகிறது.

திகன மற்றும் தெல்தெனிய ஆகிய இடங்களில் மிகவும் இறுக்கமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாவண்ணம் முழு நேர கண்காணிப்பு நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது கண்டியில் அமைதியான சூழ்னிலை காணப்பட்டபோதும் நேற்று இரவும் ஆங்காங்கே சிறு சிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

நேற்ரைய தினம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலைமையின் பின்னர் கண்டி மாவட்டத்திலுள்ள மக்கள் வெளியில் தலை காட்டுவதற்கே அஞ்சுவதாகவும் இதனால் மக்களின் இயல்பு நிலை சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் காரணமாக மாணவர்களின் இருநாள் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் மெனிக்ஹின்ன பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறையைக் கட்டுப்படுத்தச் சென்ற 3 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாட்டின் ஏனைய பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இடம்பெற்றுவரும் சிறு சிறு வன்முறைச் சம்பவங்களால் தாம் மிகுந்த அச்ச நிலையில் இருப்பதாகவும் முஸ்லிம் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

134Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*