ஒழுக்கமில்லாத சிங்கள சாரதியே கலவரத்துக்கு மூல காரணம் – தமிழ்நியுஸ் ரிப்போட்

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணம் என்னவென்று தெரியும்.

எனினும், பிரச்சினை ஏற்படுவதற்கு மூலகாரணமாக அமைந்தது, கொல்லப்பட்ட ட்ரக் சாரதி குமாரசிங்க என்பவர் தனது வாகனத்தை அங்கும் இங்கும் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணித்தமையாகும்.

அத்துடன், முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வழிவிடாமல் சென்றுள்ளார்.

பலமுறை அந்த இளைஞர்கள் முயன்றும் சாரதி வேண்டும் என்றே ட்ரக்கை செலுத்தியுள்ளார்.

இரவு வேளையில் தங்களின் சொந்த தேவையின் பொருட்டு வீதியால் சென்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியது.

பலமுறை தங்கள் போக்கில் சென்ற அவர்கள் முந்திச் செல்ல முயன்றும் குறித்த ட்ர்க் சாரதி அதற்கு இடமளிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த இளைஞர்கள் ட்ரக் சாரதியை நீண்ட தூரம் துரத்திச் சென்று பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் வைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.

இளைஞர்களின் கடுமையான தாக்குதலில் காயமடைந்த ட்ரக் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

குமாரசிங்க என்ற சாரதியின் ஒழுக்கமற்ற வாகன செலுத்துகையே இந்த கலவரத்துக்கெல்லாம் மூல காரணமாக அமைந்துள்ளது.

வேலியில் சென்ற ஓணானை வேட்டிக்குள் இழுத்து விட்ட கதையாக ட்ரக் சாரதியின் செயற்பாடு உள்ளது.

அத்துடன், அம்பாறை சம்பவமும் இதற்கு கைகோர்த்தாற் போல் அமைந்தது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் குறித்த முஸ்லிம் இளைஞர்கள் மதுபோதையில் இருந்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி ட்ரக் சாரதி பாதையில் அங்கும் இங்கும் வளைத்து வளைத்து ஓடியதால் முந்திச் செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டியின் கண்ணாடியும் உடைந்துள்ளது.

அதற்காக 1000/- ரூபாவை வழங்கிய ட்ரக் சாரதி மீண்டும் வழமை போல முந்திக் கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் என்னவாக இருந்தாலும் இளைஞர்கள் பொறுமையை கடைபிடித்திருக்க வேண்டும் அல்லது, முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து பயணித்திருக்கலாம்.

(druck driver Kumarasinghe killed vehicle tragic way Muslim youths trishow)

நன்றி தமிழ்நியூஸ்.கொம்

155Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*