பதற்றமடைந்த பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ஹக்கீம்

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

கண்டி, திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மேலும் கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர் எனவும் இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேரில் சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் முஸ்லிம்கள் எவ்வித அசம்பாவிதங்களில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறு வேண்டிக்கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

காவல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற ரவூப் ஹக்கீம், அங்குள்ள உயரதிகாரிகளுடன் பேசி முஸ்லிம் பிரதேசங்களில் இரவுநேர தாக்குதல் நடைபெறாத வண்ணம் சந்திகளில் காவல்துறையினரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

39Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*