இனவாதிகளின் சதிவலையில் ஈழத்தில் பறிபோகும் இன்னோர் தமிழ்கிராமம் …..

குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவனின் நுரையீரல் சுருங்குவதைப் போல ஈழத்தின் கிழக்கு மாகாண தமிழர் பிரதே எல்லகள் இன்று மெல்ல மெல்ல சுருங்குகிறது. இது இன்னும் சில வருட காலத்தில் முற்றாக அழிந்துவிடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டிய நிலையன்றை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கிழக்கில் தமிழர்களின் வாழ்விடம் சுருங்குகிறது. இது இன்னும் சில வருடங்களில் முற்றாக முஸ்லீம்களின் மகாணமா மாறிவிடும் நிலையே அங்கு நாள்தோறும் திட்டமிட்ட முறையில் நடக்கின்ற சம்பவங்கள் சாட்சிகளாக அமைகின்றன. அதன் பின்னர் நாங்கள் யாரிடமும் பேரம் பேச முடியாத நிலை ஏற்படப்போகிறது. உலகத்திலேயே தமிழ் மக்களுக்கு முக்கியமான, முதன்மையான தாயகமாக திகழ்ந்தது ஈழம் மட்டுமே. இன்று அதையும் பேரினவாதிகள் ஒன்றுசேர்ந்து பங்குபோட்டு பறித்தெடுக்கிறனர். நாங்கள் என்ன பாவம் செய்தோம். உலகில் தனிமையாக, யாருமே எம்மை அசைக்க முடியாத பலத்துடன் நின்ற நாங்கள், இன்று எமது நிலத்தை இழக்கின்றோம். எங்கள் வயிறு பற்றியெரிகின்றது. ஈழத் தாய் குமுறுகின்றாள். யாருக்கும் அடிமையாக இல்லாமல் நிமிர்ந்து நின்ற நாம், யாரிடமும் கையேந்தாமல் சொந்த உழைப்பில் வாழ்ந்த நாம் இன்று எமது நிலத்தை இழக்கின்றோம்.

இன்று இங்கே என்ன நடக்கிறது?

நடக்கிற எதையுமே சொல்ல முடியவில்லை. நடக்கிற அனைத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. வார்த்தைகளில் வருவதை தட்டச்சு செய்ய முடியவில்லை. கிழக்கில் இன்று அதுதான் நடக்கிறது. எது நடந்தாலும் நாங்கள் வாய்மூடி மௌனியாக இருக்க வேண்டியதாய் உள்ளது.

எங்கள் நிலம் இது. எங்கள் நிலமே இது. இதை மாற்றான் அபகரித்தால் எந்தக் காலத்தில் இதை நாம் பெற முடியும்? எம் நிலத்தில் அகலக் கால்பதிக்கும் இனவாதி நாளை தன் கால்களை குறுக்கிக்

கொள்வான் என்று எவன் எமக்கு உத்தரவாதம் தர முடியும்? முடியாது. எவனும் எங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

இன்று கிழக்கு[கிழக்கிஸ்தான்] இஸ்லாமிய மகாணமாக மாறிக்கொண்டிருக்கிறது அங்கே எங்கள் நிலங்களை ஒரு தடவை வந்து பாருங்கள். எங்கள் நிலங்களை அவன் அபகரிக்க நாங்களே உத்தரவாதப்படுத்தும் நிலை. எங்கள் காணிகளை அவன் ஆக்கிரமிக்க நாங்களே காணிகளை அடையாளப்படுத்தும் நிலை. எதுவுமே இல்லாத எமது கையில் தரப்பட்டது நில ஆக்கிரமிப்பு பத்திரம். எங்கள் காணிகளில் அதை ஒட்டும்போது நாம் அழுதோம். மனதுக்குள் அழுதோம் ஏனெனில், வெளியே தெரிந்தால் நாம் அழுவது அபசகுனமாகிவிடும்.

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாய் சுருங்கிக்கொண்டிருக்கும் தமிழ் கிராமங்கள் மத்தியில் அட்டப்பளம் எனும் பாரம்பரிய தமிழ்கிராமமும் சேர்ந்திருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியும் இன்னும் அவர்கள் பிடிக்குள் செல்லாமல் தொக்கி நிற்கின்ற சில கிராமங்களுள் சிங்காபுரி என சோழர் காலத்தில் அழைக்கப்பட்ட தொன்மைமிக்க கிராமமாக அட்டப்பளம் திகழ்கிறது.அக்கரைப்பற்று கல்முனையை இணைக்கின்ற பிரதான வீதியில் நிந்தவூரின் முடிவில் கடற்கரையை அண்மித்ததாக சுமார் 600 மீற்றருக்கு அப்பால் கடலை அண்மித்த அழகிய கிராமமாகும்.ஆரம்பத்தில் விவசாயத்திலும், மீன்பிடியிலும் செழித்து விளங்கிய இக்கிராமம் 90களில் தமிழ் முஸ்லீம் இனமுறுகலை தொடர்ந்து உயிர் அச்சுறுத்தலால் பெருமளவிலான தமிழர்கள் இக்கிராமத்தை விட்டு வெளியேறி அயலிலுள்ள தமிழ் கிராமங்களில் அடைக்கலம் புகுந்தனர்.எஞ்சிய 250 குடும்பங்கள் இன்னும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.இவ் கிராமத்தையொட்டி புராதன இந்து மயானம் ஒன்று உள்ளது.இங்கு வாழும் தமிழர்கள் இவ் மயானத்தையே சோழர் காலம் முதல் மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மயானத்தைகூட விட்டு வைக்க முடியாது மனிதாபிமானமற்ற முறையில் தனது பூமி என அதை பெறுவதற்காக கடந்த பல மாதங்களாக முஸ்லீம் ஒருவர் முயற்சித்து வருகிறார்.பிரேதங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிக்கு மேல் வேலி போட்டு மனசாட்சியற்ற செயற்பாட்டையும் மேற்கொண்டுள்ளார்.ஆனாலும் இவரின் முயற்சிகள் மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிறைவுறாத நிலையில் முறுகல் நிலை முற்றியதை தொடர்ந்து கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.பிரதேச செயலாளரும்,கிராமஉத்தியோகஸ்தரும் மக்களை சந்தித்து சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் முறையிடவே பொலிஸ் அதிகாரியின் அழைப்பின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை சமரச பேச்சு வார்த்தைக்குச் சென்ற இரு பெண்கள் உட்பட 23 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.இவர்களுக்கெதிராக நீதிமன்றில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.மேலதீக நீதவான் உத்தரவின் பேரில் இரு பெண்களும் கடும் எச்சரிக்கையின் பேரில் விடுதலை செய்யப்பட்ட அதேவேளை 21 ஆண்களுக்கும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிக்காவும் தமது நியாயமான உரிமைக்காகவும் போராடிய இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடானது மிஞ்சியிருக்கின்ற அக்கிராமத்திலுள்ள மக்களையும் வெளியேற்றுவதற்கான சூழ்சியே இவ் மயானத்தின் பிரதிபலிப்பு என அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயக பூமியில் இவ்வாறான நிலங்களை அடாத்தகமாய் கபளீகரம் செய்யும் இனவாத முஸ்லீம்களும் , அவர்களுக்கு துணையாய் நிற்கும் இனவாத அரசியல் வாதிகளும் இச் கீழ்தரமான செயற்பாடானது ஒற்றுமையாய் வாழும் இனங்களுக்கிடையே இனமுறுகளை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.எவ்வாறாயினும் நாம் தமிழர் பிரதிநிதி என கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தமிழர் விடயங்களில் மௌனம் சாதிப்பது வேடிக்கையான விடயமே.தமிழர்கள் விடயத்தில் இவர்கள் இவ்வாறு தொடர்ந்து அலட்சியப்போக்கை பின்பற்றுவதானது எதிர்காலத்தில் கிழக்கில் தமிழரின் மண்டையோடு கூட மிஞ்சாதளவிற்கு நிலமையை மாற்றும் இல்லையேல் சிட்டிசன் அத்திப்பட்டி போல் கிழக்கில் அட்டப்பளமும் வரைபடத்தில் அடுத்த முஸ்லீம் கிராமமாய் மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

பிரபா….

[ஊடகவியலாளர்]

43Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*