முட்டாள் தமிழரிற்கான பதிவு! நுண் கடன் நிதி நிறுவனங்கள் வடக்கு கிழக்கை இலக்கு வைப்பது ஏன் ???

Copied Arumugam Vimal

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் வடக்கு கிழக்கில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1977 தொடங்கி 2009 வரை எப்படி தமிழர்களால் தொடர்ந்து முப்பது வருடங்களாக யுத்தம் நடத்த முடிந்தது என்பதே அது ???

ஆம் அந்த ஆய்வின் முடிவில் கிடைதத பதில். தமிழ் மக்களது சுய சார்பு பொருளாதாரம். அது பலமாக இருக்கும் வரை தமிழர்களிற்கு சிந்திக்க நேரம் இருக்கும்.

ஆக எங்களது சுய பொருளாதார வலுவை உடைத்து விட்டால்.. சோறா சுதந்திரமா ?? என்ற நிலை ..

உதாரணமாக மலையக தமிழர்கள் போல் அன்றாடம் காய்ச்சிகளாக, எங்களது பொருளாதார ஸ்த்திர நிலையை உடைத்துவிட்டால் எங்களுடைய அரசியல் விடுதலை கோரிக்கை தானாகவே நீர்த்து போகும். இது அவர்களது கணக்கு. எங்களது நேரம் அனைத்தும் உழைப்பை நோக்கியதாக இருகும் . சிந்திக்க நேரம் இருக்காது.

2009 முன்னர் யுத்தம் நடந்தபோதும் எங்களது அடிப்படை பொருளாத இருப்பை நாங்கள் உடைய விடவில்லை கடந்த முப்பது வருடங்களாக. யுத்த செலவோடு சுயசார்பு பொருளாதார ஊக்குவிப்பிற்கும் நிதி ஒதுக்கப்பட்டு. தமிழ் மக்களது நிதி பொருளாதார நிலை ஓரளவு ஸ்த்திர தன்மையில் இருந்தது.

கடந்த 2009 யுத்தம் நிறைவுற்ற பின்னர் வடக்கு கிழக்கில்

லீசிங் நிறுவனங்கள் , பிரமிட் வியாபாரம், விசேட நுண்கடன் நிதி நிறுவனங்களூடாக வடக்கு கிழக்கு மக்களின் கணிசமான திரவப் பணம் தெற்கு சென்று விட்டது. அந்த திரவ பணம் மீண்டும் வடக்கிற்கு கொண்டுவரும் தமிழனது அடிப்படை பொருளாதார பொறிமுறை அழிந்துவிட்டது. அழித்து விட்டார்கள்.

இன்று வடக்கு கிழக்கில் விசேடமாக 80000 பெண் தலைமைத்துவ குடும்பஙகள். அப்படியான பெண் தலைமைத்தவ குடும்பங்களை இலக்கு வைத்தே இந்த நுண் கடன் நிதி நிறுவனங்கள் தங்கள் கடனை வழங்குகின்றன. அதனோடு சேர்ந்த பிரமிட் வியாபாரிகளும்.

இதனால் வட்டி பணத்திற்கு பாலியல் லஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடக்கம். வட மாகாண சபையால் கடன் வசூலிக்க நுண் நிதி கடன் நிறுவனஙகள் நிறுவனங்கள் மாலை 5.30 பின்னர் வாடிக்கையாளர்கள் வீடுகளிற்கு செல்லக்கூடாது என்ற சட்டத்தை மீறி முறையே சாவகச்சேரி மற்றும் வடமராட்சியில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வீடுகளில் நுண் கடன் நிதி நிறுவன ஊழியர்கள் இரவு ஒன்பது மணியின் பின்னர் அட்டகாசம் போட்டிருந்தனர்.

இந்த நுண் கடன் நிதி நிறுவனங்களின் கடன் திட்டங்கள் கூட தமிழ் மக்கள் மீதான ஒருவகை பொருளாதார உளவியல் யுத்தமே.

வடக்கு கிழக்கில் எத்தனை எத்தனை இளந் தாய்மார் தற்கொலை இந்த நுண் நிதி கடன் நிதி நிறுவனஙகளின் வட்டி தொல்லையால்.

இது ஒரு ஆரம்ப நிலை. யுத்தம் நடைபெற்ற போது கூட வீதியில் இறங்கி வியாபாரம் செய்யாத பத்து பதினொரு வயது பெண் பிள்ளைகள் கடந்த வருடம் 2017 நல்லூர் முருகன் கோவில் திருவிழாவில் ஊதுபத்தி விற்ரு திரிந்தார்கள். காரணம் வறுமை.

அதனைவிட யாழ்ப்பாண புடவை மற்ரும் சாப்பாட்டு வியாபாரம் முஸ்லீம்களிடம் சென்றுவிட்டது. இந்த நிதி நிறுவனஙகளின் வட்டி பெரிய முதலாளிகளையே அடிச்சு தூக்கி எறிகிறது என்றால் சாதரண தமிழ் மக்களது நிலை எத்தகயது என்று நீங்கள் சாதாரணமாக விளங்கி கொள்ளலாம்.

இதுவே வடக்கு கிழக்கின் இன்றைய யதார்த்தம் நிலை.

போலி தமிழ் தேசியம் பேசும் எந்த அரசியல்வாதிகளும் சரி. அல்லது வழக்கறிஞர்களும் சரி தமிழ் மக்களின் பொருளாதார இருப்பு பறிபோவது பற்றி சிறு துளிகூட கவலையின்றி

தங்கள் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற கதிரை கனவுகளிலும் அதனை நோக்கிய நகர்வுகளிலும் தமிழ் இனவாத உசுப்பு அரசியலும் என்று அலைகின்றனர்.

குறைந்து தமிழ் மக்கள் மத்தியில் இந்த நுண் கடன் நிதி நிறுவனங்களின் கடன் பொறிகளில் விழாமல் இருக்க விழிப்புணர்வு வேலைததிட்டம் கூட தமிழ் மக்களிடத்தில் முன்னெடுக்க படவில்லை.

கடன் தொல்லை காரணமாக இலங்கையில் வடக்கு கிழக்கில்தான் இளந்தாய்மார் தற்கொலைகள் அதிகம்.

பசி வந்திட பத்தும் பறந்துபோம். மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததுபோல்.. யுத்தம் , வறுமை, நுண் கடன் நிதி நிறுவனங்கள் வட்டி தொல்லை ..

கிளிநொச்சியில் விபச்சார விடுதியை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தபோது . கிளிநொச்சியில் விபச்சார விடுதியா ?????

தமிழ் மக்களே அதிர்ந்து போனார்கள். ஆம் ஆனால் அது ஜீரணிக்க முடியாத கசபபான உண்மை.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களது பொருளாதார இருப்பு தொடர்பான முறையான பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளபடாது விட்டால்…..

ஒரு கதைக்கு எங்கள் வீராதி வீரர்கள். சூராதி சூரர்கள் பத்து வருடங்களின் பின் அரசியல் தீர்வு வாங்கி வருமபோது.

அரைவாசி மூஸ்லீமாக மாறி . அரைவாசி மாசஜ் நிலையம். மற்ரும் …. கலந்து கரைந்து போய் இருக்கும் அரசியல் உரிமை கேட்டு போராடிய தமிழ் இனம்.

தமிழ் அரசியல்வாதிகளே நீங்கள் கம்மர் ஜீப் இறக்குஙகோ. நான்கு கோடி வீடு வாங்குங்கோ. ஆளுக்கு இரண்டு கோடி வாங்குங்கோ அது பிரச்சனை இல்லை.

ஆனால் பொருளாதார அடிமைகளாக நுண் கடன் நிதி நிறுவனங்களிடம் கடன் வட்டி என்ற பொறியில் நவீன பொருளாதார சிறையில் சிக்கி தவிக்கும் தமிழ் இனத்தை சிறை மீட்டெடுங்கள்.

இல்லையேல் !!!!!!! உங்கள் போலி தமிழ் தேசிய உசுப்பு அரசியலுக்கு வாக்களிக்க தமிழ் அடையாளத்தோடு எவனும் இருக்கமாட்டான் வடக்கு கிழக்கில் ..

வடக்கு கிழக்கில் இம்முறை 2018 அபிவிருத்தி அரசியல் கோசத்துடன் கால் பதித்த சிங்கள கட்சிகள் உள்ளூராட்சி சபை தேர்தலில் இம்முறை 40 % வாக்குகளை அள்ளின. இது உங்களிற்கு ஒரு எச்சரிக்கை அலாரம். 🚨 தமிழ் அரசியல்வாதிகளே.

30Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*