மட்டக்களப்பு வைத்திய சாலையில் மீண்டும் ஒரு கொலை ; கண்ணீர் வடித்து கதறியழும் குழந்தைகள் ….!!

நாம் வாய்மூடி மௌனித்திருக்க நம் சமூகத்தை வேரோடு பிடுங்கி புதைகுழியில் புதைக்கப்பார்க்கிறது.மட்டு போதனா வைத்தியசாலை.சிலவருடங்களாக மட்டுபோதனாவைத்தியசாலையின் நிருவாகமுறைமை,சிகிச்சைகளின் தன்மை என்பன தொடர்பில் மாபெரும் கவலையையும்,பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது.சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்கள் சுகம் பெற்றுச்செல்வதென்பது தற்போதைய நிலையில் அவரவர் அதிஷ்டம் என்றாகிவிட்டது.பாவம் மக்கள் அவர்களால் மருத்துவமா படிக்க முடியும் ?

மட்டு போதனாவைத்தியசாலையில் தொடரும் வைத்தியர்களின் அசமந்த போக்கினால் எத்தனை எத்தனை பாமர குடும்பங்களின் சாபங்களை இவ் வைத்திய சாலை சம்பாதித்திருக்கிறது.இன்னும் சம்பாதிக்கவா போகிறது..?

கடந்த 16ம் திகதி காலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது 5வது குழந்தையை பெற்றெடுக்க ஈழத்தின் மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கிருஸ்ணவேணி வயது [35 ] என்பவர் மகபேற்று விடுதி இலக்கம் 05 ல் அனுமதிக்கப்பட்டார்.ஏலவே நான்கு பிள்ளைகளை சுகப்பிரசவம் மூலம் பெற்றெடுத்த கிருஸ்ணவேணி தனது ஐந்தாவது குழந்தையை கருவுற்ற காலம் முதல் மேலதீக மருத்துவ பராபரிப்பை பெற்றுக்கொள்ள வைத்திய நிபுணர் திருக்குமரனிடமே பெற்று வந்துள்ளார்.இதனால் கிருஸ்ணவேணியின் சுகப்பிரசத்துக்காகவே மீண்டும் பரிந்துரைத்து வைத்தியரின் பரிந்துரையின் பேரில் மட்டு போதனா வைத்திய சாலையில் கடந்த 16ம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய்க்கு சுகப்பிரசவம் குறித்த திகதியில் நிகழாத காரணத்தினால் அவருக்கு வலியை ஏற்படுத்துவதற்காக அல்லது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தி குழந்தை பிறப்பை தூண்டும் மருந்தான (prostoglertin) எனும் மருந்து தாயின் பிறப்புறுப்பினுள் தொடர்ச்சியாக ஏற்றப்பட்டுள்ளது.ஆனால் பிரசவம் நிகழவில்லை.தொடர்ந்து இரவு நேர விடுதி கடமை அதிகாரி கற்பிணி தாய்க்கு சரியான சிகிச்சை வழங்காது கிருஸ்ணவேணிக்கு தாதிகளே பிரசவம் பார்க்க முயற்சித்துள்ளனர்.தொடர்சியாய் ஏற்படுத்தப்பட்ட பிரசவவலியால் உயிர்போகும் வேதனையில் கற்பிணிதாய் துடித்துள்ளார்.தனக்கு உயிர்போகும் வேதனையாக இருப்பதாகவும் ,”தாங்க

முடியவில்லை எதாவது செய்யுங்கள்.” என மன்றாடமாய் கெஞ்சியுள்ளார்.கற்பிணி தாயின் நிலமை மோசமடையவே அன்றைய இரவு நேர பிரவவிடுதியின் மகபேற்று வைத்தியரை தாதிகள் தேடியுள்ளனர்.அவர் வீடு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.இரவு 11.30 அளவில் வைத்தியருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போது “நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” எனக்கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.நிலமை மேலும் மோசமானது அதிகாலை 1மணிக்கும் 2மணிக்கும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் வைத்திய அதிகாரி அதிகாலை 5மணிக்கே வைத்திய சாலைக்கு வந்துள்ளார் .வைத்திய அதிகாரியின் அசமந்த போக்கினாலும்,சம்பவ இடத்துக்கு வராத காரணத்தினாலும் ,பல இழுபறிகளுக்கு பின்னர் வைத்திய தாதிகளினால் கற்பிணி தாய்க்கு பன்னீர் குடம் உடைக்கப்பட்டு பிறப்புறுப்பினுள் ஆயுத்தை உட்செலுத்தி (forcep delivery)குழந்தையை வெளியே எடுத்துள்ளனர் .

ஆனாலும் சிகிச்சை உரிய நேரத்தில் இடம்பெறாத காரணத்தினாலும்,தொடர்ச்சியாக ஏற்றப்பட்ட மருந்தின் தாக்கம் காரணமாகவும்,பிரசவத்தில் தாய்க்கு ஏற்பட்ட பயம் [anxieties ]மனவழுத்தம் பிரசவவேதனை எல்லாம் ஒன்றுசேர்ந்து இதயதொழில்படுகை (cardiacarrest) நிறுத்தப்பட்டு காலை5.10க்கு பிரசவ அறையிலேயே தாய் மரணமடைந்துள்ளார்.வைத்தியரின் அசமந்த போக்கால் நான்கு குழந்தைகள் இன்று நடுவீதியில் தவிக்கின்றனர் . கணவர் புத்தி பேதலித்த நிலையில் இந்நிலைக்கு யார் பொறுப்பு கூறுவது…?

ஈழத்தை பொறுத்தவரையில் தமிழினத்தில் குடும்பவிகிதாசாரம் நலிவுற்று சிதைந்த நிலையிலும் இதனோடிணைந்து பிறப்பு விகிதம் குறைந்தும் வருகின்றது.தமிழினத்தை சீரழித்து தாய் சேய் மரண வீதத்தை அதிகரிக்கும் நிகழ்வுகளும்,திட்டமிட்ட கருக்கலைப்புகளும் கட்டாய கருத்தடை முறையும் திட்டமிட்டவகையில் மறைமுகமாக திரைமறைவில் அரங்கேறி வருவதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றாகும் .இவ்வாறான பின்னூட்டல்களில் குழந்தை வைத்திய நிபுணர்களும்,மகபேற்று வைத்திய நிபுணர்களும் பெரும் பங்காளர்களாக உள்ளரோ என அண்மைக்காலங்களில் ஈழத்தில் இயங்கும் அரச வைத்திய சாலைகளில் நடந்தேறிய சம்பவங்கள் வைத்து எண்ணத்தோன்றுகிறது.

எது எவ்வாறு இருப்பினும் கொலைக்களத்தில் கழுத்தை நீட்டும் ஆடுகளைப்போல மக்களின் உயிரை பறிக்கும் வைத்தியர்களின் செயற்பாடானது கண்டிக்கத்தக்கதாகும் .உரிய முறையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இனியும் மட்டு போதனாவைத்தியசாலையில் மீட்டும் ஒரு உயிர் துறக்கா வண்ணம் அரச அதிகாரிகள் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுப்பார்களா….?

தேனக தமிழச்சி…

401Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*