Breaking News

வவுனியா

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மின்தடை

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்றைய தினம்(21) குறித்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, யாழ். மாவட்டத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் கடற்படை ஜெற்றி, காரைநகர் இராணுவ, கடற்படை முகாம், வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை, கேணியடி ஆகிய பகுதிகளிலும், …

மேலும் படிக்க...

2 பேர் கல்வி கற்கும் பாடசாலை: சாதனை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

வவுனியா நெடுங்கேணி பட்டடை பிரிந்த குளம் அ.த.க பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் கெங்காதரன் கென்றிக்சனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் The compossion cherity lk எனும் தாயக மக்களுக்கான தொண்டு நிறுவனத்தினால் துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது. இதேவேளை குறித்த மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதுடன் பாடசாலையையும் அடையாளப்படுத்தியுள்ளார். ஏனெனில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய …

மேலும் படிக்க...

சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள்: இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடு

வவுனியா நகரில் ஒட்டப்பட்ட சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கில் ஒட்டப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பையடுத்து இன்று வவுனியா வர்த்தகர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும், வவுனியா மாவட்டத்தில் அனைத்து இன, மத மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் வவுனியா நகர்ப்பகுதிகள் எங்கும் சில விஷமிகளால் சிவசேனா என்ற …

மேலும் படிக்க...

வவுனியாவில் பதின்மூன்று வயது மகளைக் கர்ப்பமாக்கிய கொடிய தந்தை

வவுனியாவில் தனது பதின்மூன்று வயது மகளைத் துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து நபர் ஒருவர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமியின் தாயார் வவுனியா மருத்துவ மனைக்கு கடந்த வியாழக்கிழமை குறித்த சிறுமியை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது இந்த சிறுமி இரண்டு மாத …

மேலும் படிக்க...

அம்புலன்ஸ் வண்டியில் உயிருக்கு போராடும் நோயாளி! அம்புலன்ஸ் வண்டியினை நிறுத்திவிட்டு வீதியில் ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்ட உத்தியோகத்தர்கள்!

அம்புலன்ஸ் வண்டியினை நிறுத்திவிட்டு வீதியில் ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்ட வவுனியா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி நோயாளிகளை ஏற்றிச்சென்ற அம்புலன்ஸ் வண்டி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகே (பாதசாரிகள் கடவையில்) நேற்றையதினம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் அம்புலன்ஸ் வண்டியில் இருக்கும் புகைப்படமும் வண்டியின் சாரதி , வைத்தியர்கள் , வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஐஸ்கிறீம் சாப்பிடும் புகைப்படமும் , அன்புலன்ஸ் பாதசாரிகள் கடவையில் …

மேலும் படிக்க...

கைக்குழந்தைகளை பயன்படுத்தி வியாபரம் செய்த வவுனியாவில் சிக்கிய ஐவர்

வவுனியா நகர்ப்பகுதியில் ஊதுபத்தி பொருட்கள் விற்பனையில் பல மாதங்களாக சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 5பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று இரவு 7 மணியளவில் குடியிருப்பு பூங்கா வீதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. கடந்த பல மாதங்களாக புத்தளம் பகுதியிலிருந்து வவுனியா நகர்ப்பகுதிகளில் ஊதுபத்திகளை வீதியோரங்களில் விற்பனை செய்து வருவதாக வவுனியா உதவிப்பிரதேச செயலாளருக்கு தகவல் …

மேலும் படிக்க...

வவுனியாவில் புதையல் தோண்டிய நபர்கள் பொலிஸ் நிலையத்தில்

வவுனியா – சிதம்பரபுரம் பழைய கற்குளம் பகுதியில் புதையல் தோண்டிய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வவுனியாவில் புதையல் தோண்டிய நபர்கள் பொலிஸ் நிலையத்தில் வவுனியா சிதம்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே புதையல் தோண்டும் நடவடிக்கையில் …

மேலும் படிக்க...

இந்தியா மத்திய அரசு தமிழர் பிரதேசத்தில் திட்டமிட்டு தமது அதிகாரத்தை செலுத்துகின்றது ,

எமது மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கின்றாத இந்தியா மத்திய அரசு ? காந்தி சிலைகளை பிரதேசம் பிரதேசமாக நிர்மானிக்க காரணம் என்ன ? ஈழத்தமிழருக்கு காந்தி செய்த சேவைதான் என்ன ? அகிம்சையை உலகிற்கு உணர்த்திய தியாதீபம் திலீபன் பிறந்த மண்ணில் காந்திக்கு விழா எடுப்பும், விளக்கு பிடித்தாலும் நடை பெறுகிறது.

மேலும் படிக்க...

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் குறித்து டக்ளஸ் எம்.பி வெளியிட்ட தகவல்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மக்களை ஏமாற்றி வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியா தேக்கவத்தை பகுதியில் தமது கட்சியின் அலுவலகம் ஒன்றை திறந்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு நான்கு வருடங்களுக்கு மேல் கடந்துள்ளது. எனினும் கடந்துள்ள காலப்பகுதியில் மாகாண சபை மூலம் மக்களின் நலன்களுக்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. …

மேலும் படிக்க...

அதிரடிப்படையினர் தோண்டிய கிடங்கில் அதிசயம்: எஞ்சியதோ ஏமாற்றம்!

வீட்டுக்காணியொன்றின் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையினரால் அங்கு தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வவுனியா மாவட்டம் பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அப்பகுதி முழுவதும் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் இருந்துள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் கிராமசேவகர் முன்னிலையில் நடைபெற்ற தோண்டல் நடவடிக்கையின் பின்னர் அப்பகுதியிலிருந்து வெற்றுத் தகரப் பீப்பாய் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் விசேட அதிரடிப்படையினர் …

மேலும் படிக்க...