Breaking News

முல்லைத்தீவு

2 பேர் கல்வி கற்கும் பாடசாலை: சாதனை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

வவுனியா நெடுங்கேணி பட்டடை பிரிந்த குளம் அ.த.க பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் கெங்காதரன் கென்றிக்சனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் The compossion cherity lk எனும் தாயக மக்களுக்கான தொண்டு நிறுவனத்தினால் துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது. இதேவேளை குறித்த மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதுடன் பாடசாலையையும் அடையாளப்படுத்தியுள்ளார். ஏனெனில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய …

மேலும் படிக்க...

கடலில் குளிக்கச்சென்ற இரு மாணவர்கள் மாயம்! முல்லைத்தீவில் சோகம்

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதில் முல்லைத்தீவு உண்ணாப்புலவை சேர்ந்த 18 …

மேலும் படிக்க...

முல்லைத்தீவு இராணுவம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

இலங்கையின் மொத்த இராணுவத்தில் 25 சதவீதமானவர்கள் முல்லைத்தீவில் நிலை கொண்டிருப்பதாக புள்ளிவிபர ஊடக தகவல் ஒன்று தெரிவிக்கின்றன. முல்லைத்தீவின் சனத்தொகை 1 இலட்சத்து 30ஆயிரம் என்று குறிப்பிடும் புள்ளிவிபரம் இங்கு நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை 60ஆயிரம் என தெரிவிக்கின்றது. ஸ்ரீலங்காவின் மொத்தமாக 2 இலட்சத்து 43ஆயிரம் இராணுவம் உள்ள நிலையில் முல்லைத்தீவு பாரிய இராணுவ வலயத்துள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறித்த புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகின்றது. இந்த ஆய்வு புள்ளிவிபரத்தில் முல்லைத்தீவின் கடற்படை விமானப்படை …

மேலும் படிக்க...

முல்லைத்தீவு இளைஞன் சுவிஸ் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான காரணம் என்ன?

முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சுவிஸ்லாந்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இரு பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் கரன் என்ற 38 வயது குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் சுவிஸ்லாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார். இவர் புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவராகும். இவர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் …

மேலும் படிக்க...

மக்களுக்காக விடுதலைப் புலிகள் அமைத்த பாலம்! இதன் தற்போதைய நிலை..

யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட பாலம் ஒன்று தற்பொழுது ஸ்ரீலங்கா இராணுவத்தின் இரண்டு பெரும் படைப் பிரிவுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் பாலம் என அழைக்கப்படுகிறது. இறுதியாக நடந்த கடும் யுத்தத்தின்போது இந்தப் பாலம் விடுதலைப் புலிகளினால் புனரமைக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, 2008 ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில் வன்னியில் கடும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. கிளிநொச்சி …

மேலும் படிக்க...

புதுக்குடியிருப்பு இளைஞர்களின் அதிரடி வேட்டை,கஞ்சா வியாபாரிகள் மாட்டினர்!

சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் 400g கஞ்சாவுடன் இருவர் சிக்கியுள்ளனர்.புதுக்குடியிருப்பு பகுதியில் அண்மைய நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் திருடர்களை இனங்காணும் நோக்கோடு காவல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் விழிப்புடன் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன்னர் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர் குழுவிடம் கஞ்சா பொதியுடன் இருவர் வசமாக சிக்கியுள்ளனர். சிக்கியவர்கள் தம் வசம் 400கிராம் கஞ்சாவை வைத்திருந்ததோடு வியாபார நோக்கத்துடன் கஞ்சாவை உடமையில் வைத்திருந்துள்ளனர். மாட்டிய இருவரையும் முறையாக …

மேலும் படிக்க...

வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன, கழிவு வாய்க்கால்களை புனரமைக்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன மற்றும் கழிவு வாய்க்கால்களை புனரமைக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வவுனிக்குளத்தின் கீழ் ஆறாயிரத்து 60 ஏக்கர் நிலப்பரப்பில் 2000 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெற்செய்கையில் வருடாந்தம் ஈடுபட்டு வருகின்றதாக இந்த பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாது இருந்த குளத்தின் புனரமைப்புப் பணிகள் மீள்குடியேற்றத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்ற கருத்திட்டத்தின் கீழ் …

மேலும் படிக்க...

இந்தியா மத்திய அரசு தமிழர் பிரதேசத்தில் திட்டமிட்டு தமது அதிகாரத்தை செலுத்துகின்றது ,

எமது மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கின்றாத இந்தியா மத்திய அரசு ? காந்தி சிலைகளை பிரதேசம் பிரதேசமாக நிர்மானிக்க காரணம் என்ன ? ஈழத்தமிழருக்கு காந்தி செய்த சேவைதான் என்ன ? அகிம்சையை உலகிற்கு உணர்த்திய தியாதீபம் திலீபன் பிறந்த மண்ணில் காந்திக்கு விழா எடுப்பும், விளக்கு பிடித்தாலும் நடை பெறுகிறது.

மேலும் படிக்க...

கேப்பாபிலவில் இருந்து வெளியேறும் இராணுவம்

முல்லைத்தீவு கேப்பாபிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேப்பாபிலவு இராணுவ முகாம்களில் இருந்து படையினர் வெளியேறிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். கேப்பாபிலவு இராணுவ முகாமில் இருந்து வெளியேறும் இராணுவம் 64 பேருக்கு சொந்தமான 111 ஏக்கர் காணி விடுவிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் முகாம்களில் இருந்து படையினர் முற்றுமுழுதாக வெளியேறிய பின்னர் காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக கையேற்கும் என்றும் மாவட்ட …

மேலும் படிக்க...