Breaking News

கிளிநொச்சி

பொலிஸ் பாதுகாப்பும் வாகனமும் தருகிறேன் எங்கு இரகசிய முகாம் இருக்கிறதோ அங்கு சென்று பார்வையிடுங்கள்”..

கிளிநொச்சிக்கு பயனித்த ஜனாதிபதி மைதிரிபால சிறசேன  காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை  கிளிநொச்சியில் இடம்பெற்ற இரண்டாவது நிகழ்வில்  சந்தித்து கலந்துரையாடினாா். காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜனாதிபதியை  பிரத்தியேகமாக சந்திக்க வேண்டும் எனக்  கோரிக்கை விடுத்ததனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி  கிளிநொச்சியிலிருந்து  கொழும்புக்கு  வாகன ஏற்பாடு செய்வதாகவும், எனவே அங்கு வந்து சந்தித்திக்குமாறும் கூறினாா். இதனை ஏற்றுக்கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின்  கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தனா். இதன் போது …

மேலும் படிக்க...

கிளிநொச்சி போக்குவரத்து பொலிசாரின் பொறுப்பற்ற செயல், கோர விபத்தில் இன்பர்சிட்டியின் மூர்த உறுப்பினர் கணபதிபிள்ளை அன்னலிங்கம் பலி….!

இன்பர்சிட்டியை பிறப்பிடமாகவும்,வதிபிடமாகவும் கொண்ட திரு கணபதிபிள்ளை அன்னலிங்கம் அவர்கள் இன்று அதிகாலை விபத்தில் அகாலமரணம் அடைந்துள்ளார்.இவர் நாடு,ஊர் பற்றுக்கொண்ட மூத்த உறுப்பினர் ஆவார்…. கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று 12.10.2017 இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மோட்டார் …

மேலும் படிக்க...

மகாதேவா சிறுவர் இல்ல அதிகாரி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சிறுவர் இல்ல அதிகாரி ஒருவர் நிதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி இன்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுவர்களில் 6 சிறுவர்கள் சிறுவர் இல்ல அதிகாரிகளின் …

மேலும் படிக்க...

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் கொடூர சித்திரவதைகள் அம்பலமாகியது!!

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்ல அதிகாரிகளினால் அந்த இல்லத்தில் வசித்து வந்த 6 மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவரின் தந்தை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்தார். இன்று காலை பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையான யாழ்ப்பாணம் – கந்தர்மடத்தைச் சேர்ந்த பிறேம்குமார் இந்த விடயத்தை வெளிப்படையாக தெரியப்படுத்தி இருந்தார். கிளிநொச்சி …

மேலும் படிக்க...

இந்தியா மத்திய அரசு தமிழர் பிரதேசத்தில் திட்டமிட்டு தமது அதிகாரத்தை செலுத்துகின்றது ,

எமது மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கின்றாத இந்தியா மத்திய அரசு ? காந்தி சிலைகளை பிரதேசம் பிரதேசமாக நிர்மானிக்க காரணம் என்ன ? ஈழத்தமிழருக்கு காந்தி செய்த சேவைதான் என்ன ? அகிம்சையை உலகிற்கு உணர்த்திய தியாதீபம் திலீபன் பிறந்த மண்ணில் காந்திக்கு விழா எடுப்பும், விளக்கு பிடித்தாலும் நடை பெறுகிறது.

மேலும் படிக்க...

கிளிநொச்சியில் E.P.D.P – E.P.R.L.F ஒட்டுக்குழுவால் பாடசாலையில் அட்டகாசம்

ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் அராஜகத்தின் தொடராக ஈ.பி.ஆர்.எல்.எவ் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனால் கிளிநொச்சிப் பாடசாலைகளுக்கு கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை அழைக்கக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள வைரவிழா நிகழ்வின் பிரதம விருந்தினராக அப்பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரை பிரதம விருந்தினராக அழைக்க முடியாது எனக் கோரியும் வைரவிழா …

மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பஷில்!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்றுகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளதுடன் அப்பிரதேச மக்களையும் சந்தித்துள்ளார். இன்று மாலை முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் முல்லைத்தீவு மாவட்ட லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களால் அவரிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்ட பஷில் ராஜபக்ஷ தொடர்ந்து மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார். இதன்போது அங்கு உரையாற்றிய அவர், “இன்று விவசாயிகள் தமது …

மேலும் படிக்க...

பிரபாகரன் ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன்! கிளிநொச்சியில் ஒலித்த குரல்

நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இது ஓர் தனி ஈழமான பிறந்திருக்க வேண்டியதற்காக போராடிய ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகப்பெரிய தலைவனோடு சில நாட்கள் நான் இந்த …

மேலும் படிக்க...

பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றில் வாக்குமூலம்!

கிளிநொச்சி – பளைப்பகுதியில் அனுதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஒருவர் பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றினால் தவணையிடப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் advertisement இதன்போது சாட்சிகள் சார்பில் அப்போதைய பளைப்பொலிஸ் நிலையப் …

மேலும் படிக்க...

சற்று முன் கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றம்

கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுபோதையில் நின்ற  நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக  இந்த …

மேலும் படிக்க...