Breaking News

மலையக செய்திகள்

தாத்தாவால் 11 வயதுடைய சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!!

11 வயதுடைய சிறு­மியை மூன்று சந்­தர்ப்­பங்­களில் பாலியல் குற்­றத்­திற்­குட்­ப­டுத்­திய 50 வயதுடைய நபருக்கு 24 மாத கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்த கண்டி மேல் நீதி­மன்ற நீதிவான் தீர்ப்பிட்டார். இதேவேளை, பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு 75,000 ரூபா நஷ்­ட­ஈ­டா­கவும் வழங்குமாறும் குற்றவாளிக்கு நீதிவான் உத்­த­ர­விட்டார். கண்­டி, தென்­னங்­கும்­புர பிர­தே­சத்தைச் சேர்ந்த 50 வயது வயோ­திபர் ஒரு­வ­ருக்கே நீதிவான் இவ்­வாறு தண்­டனை விதித்தார். வீட்டில் ஒரு­வரும் இல்­லாத வேளை­களில் தாத்தா உறவு முறை­யான …

மேலும் படிக்க...

இலங்கையில் சாதனைக்காக செய்யப்பட்ட திருமணம் சர்ச்சையில் முடிவு

கண்டி, கன்னோருவ பிரதேசத்தில் நேற்று கின்னஸ் சாதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு சர்ச்சையில் முடிந்துள்ளது. இது தொடர்பில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி – கொழும்பு வீதியில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடையில், மணமகளின் ஒசரி புடவையை பிடித்து கொண்டு வெயிலில் நின்றமையே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.. அந்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கலந்து கொண்டிருந்தார். அவர் …

மேலும் படிக்க...

கண்டியில் நடந்த உலக சாதனை திருமணம்

கண்டியில் இன்று நடைபெற்ற திருமணம்ஒன்றில் மணப்பெண் உலக சாதனைபடைத்துள்ளார். மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரிபுடவையை அணிந்து சாதனையை பதிவுசெய்துள்ளார். இன்று முற்பகல் இந்த தம்பதியினர்கன்னொருவ சந்திக்கு வந்த பின்னர்,கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழுமுன்னிலையில் , ஒசரி புடவையின் நீளம்அளவிடப்பட்டுள்ளது. குறித்த புடவை கண்டி கெடம்பே சந்தியில்இருந்து ஈரியகம சந்தி வரை நீளமுடையதுஎன கணக்கிடப்பட்டுள்ளது. பாரவூர்தியொன்றில் கொண்டு வரப்பட்டஒசரி புடவை, வீதியில் சுமார் 250மாணவர்களால் தாங்கிபிடிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது …

மேலும் படிக்க...

இரத்தினபுரியில் சற்றுமுன் மண்சரிவு!! மக்கள் இடம்பெயர்வு

இரத்தினபுரி மாவடத்தில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இரத்தினபுரியில் சற்றுமுன் மண்சரிவு – பாதுகாப்பான இடங்களிற்கு மக்கள் இடம்பெயர்வு இரத்தனபுரி ஹபுகஸ்தென்ன வேவல்கட்டிய பிரதேசத்தில் சற்று முன் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் 5 மாவட்டங்களிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இரத்தினபுரி, எஹெலியகொட பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று மதியம் குறித்த மண்சரிவு …

மேலும் படிக்க...

பெற்ற பிள்ளைகளாலேயே அனாதையாக்கப்பட்ட வயோதிப தாய் – துன்புறுத்திய பிள்ளைகள்

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதை நாட்டில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தமது வயோதிப பெற்றோரை பிள்ளைகள் சரியாக பராமரிக்க வேண்டும் என்று எத்தனை விழிப்புணர்வு சமூகத்தால் வழங்கப்பட்டாலும் இப்படியான சில சம்பவங்கள் எமது சமூகத்தின் பின்நோக்கிய நிலையை காட்டி நிற்கின்றது. வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சம்பவம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பெற்ற பிள்ளைகளாலேயே அனாதையாக்கப்பட்ட வயோதிப தாய் – துன்புறுத்திய பிள்ளைகள் பிள்ளைகள் …

மேலும் படிக்க...

கதிர்காமம் ஆலயத்தின் பொறுப்பாளர்கள் புத்தசாசன அமைச்சுக்கு அழைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமத் தளத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் பூசகர்களை நாளை திங்கட்கிழமை புத்த சாசன அமைச்சுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். கதிர்காமத்தளத்தில் பிரதான தேவாலயத்தின் திறப்பைக் கையளிப்பதில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கடந்த 22 ஆம் திகதி ஆலயத்தில் அதிகாலை பூசைகள் இடம்பெறவில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அவர்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது

மேலும் படிக்க...

நாட்டின் பல பாகங்களில் இன்று இரவு கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இந்நிலையில், திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.மழை பெய்யும் போது இடையிடையே கடும் காற்று மற்றும் மின்னல் தாக்குதல் இடம்பெறக்கூடும் …

மேலும் படிக்க...

இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..!

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஊவா வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரசேங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடுமையான …

மேலும் படிக்க...

நுவரெலியா கந்தபளையில் கைகுண்டு மீட்பு

நுவரெலியா கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை நகர பிரதான குப்பை மேடு அமைந்திருக்கும் கந்தபளை இராகலை பிரதான வீதிக்கு அருகில் நேற்று மாலை கைகுண்டு ஒன்று கந்தபளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த பிரதான வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் கந்தபளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த கந்தபளை பொலிஸார் கைகுண்டை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, நுவரெலியா பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்த கந்தபளை பொலிஸார் இக்கைகுண்டினை மீட்பதற்கு இராணுவத்தின் …

மேலும் படிக்க...

சமூர்த்தி பயனாளிகள் தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூர்த்தி உதவு தொகைகளை சமூர்த்தி பயனாளிகளுக்கு முறையாக வழங்காமலும், உதவு தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து, அதற்கு எதிர்த்து இன்று லிந்துலை தலவாக்கலை நகரசபைக்கு அருகாமையில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஓரத்தின் சமூர்த்தி உதவு தொகை பெறும் சுமார் 200ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தங்களின் பாதிப்பு தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.   …

மேலும் படிக்க...