மது கொடுத்து வாக்கு வேட்டையில் ஈடுபட்ட தமிழ் கட்சி

142
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பற்றுபிரதேச சபைக்கான தேர்தலில் சாராயம் கொடுத்து வாக்குவேட்டை நடப்பதாக பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான119 இற்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

உள்ளூராட்சி சபைகளுக்கானதேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஏறாவூர், குமாரவேலியார்கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில்அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியை அண்டிய பகுதியொன்றில்இந்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழ் கட்சியொன்றைச் சேர்ந்தோர் மாற்றுக் கட்சி ஆதரவாளர்களுக்கு சாராயத்தைவழங்கி வாக்கு வேட்டையில் ஈடுபடுவதாகமுறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி ஆதரவாளர்களே இந்தமுறைப்பாட்டை செய்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.