புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஈவினை அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் பெரும் குழப்பம்: ஊடகவியலாளரின் ஒலிப்பதிவு கருவியைப் பறித்து சுன்னாகம் பொலிஸார் அடாவடி

89
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஈவினை அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் இன்று காலை 8 மணியளவில் பெரும் குழப்பம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் உள்ளே தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிற்றூழியர்கள் அனைவரும் கூட்டமைப்பு ஆதரவாளர்களாக இருந்துள்ளனர்.

வாக்குச் சீட்டு போடும் பெட்டிக்கு அருகே வீட்டுக்கு புள்ளடி போட்ட படம் ஒன்று சிற்றூழியர் ஒருவரால் வைக்கப்பட்டுள்ளது. இதனை வாக்குப் போடும் வாக்காளர் ஒருவர் அவதானித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குழப்பம் இடம்பெறுவதனை அறிந்து அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரின் ஒலிப்பதிவுக் கருவி சுன்னாகம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு அவர் பொலிஸாரால் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படுவதாக அங்கு சென்ற வாக்காளர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எதிர்ப்பை அடுத்து தற்போது உள்ளே கடமையாற்றிய சிற்றூழியர்கள் இருவர் பொலிஸாரால் வெளியே கடமையை செய்யும்படி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை காப்போத்தல் சாராயப் போத்தல்களை வாக்காளர்களுக்கு விநியோகித்த கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஊரவர்களால் துரத்தப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர்.

குறித்த வாக்குச்சாவடி வாக்குகள் அனைத்தையும் நிராகரித்து மீள் தேர்தல் நடாத்த உத்தரவிட வேண்டும் என அப்பகுதி வாக்காளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.