வாழைச்சேனை ஓட்டமாவடியில் மக்கள் பிரதிநிதி மற்றும் மக்கள் வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக ஒரு மாநகர சபை¸ இரண்டு நகரசபை¸ ஒன்பது பிரதேச சபைகளுக்குமான தேர்தல் இன்று சனிக்கிழமை இடம்பெற்று வருவதுடன்¸ இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 380327 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் அலுவலகமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்பட்டு வருவதுடன்¸ தேர்தல் கடமைகளுக்காக 4437 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்¸ பொலிஸாரும்¸ விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதுடன்¸ கண்காணிப்பதற்காக பவ்ரல்¸ கபே¸ ட்ரான்ஸ் பேரன்ஸ்¸ சி.எம்.வி.பி. போன்ற அமைப்புகள் ஈடுபட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 238 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து 901 பெண் பிரதிநிதிகள் அடங்கலாக 2736 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 144 வட்டாரங்களில் 124 வட்டாரங்கள் தொகுதி அடிப்படையிலும்¸ 20 வாக்கு நிலையங்களில் வாக்குகளை எண்ணுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது வாக்கினை ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலும்¸ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது வாக்கினை வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்திலும் அளித்தனர்.

அத்தோடு பொதுமக்களும் இம்முறை உட்சாகமான முறையில் தங்களுடைய வாக்கினை அளிப்பதை காணக்கூடியதாக இருந்தது.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*