2000 ஒப்பங்களை மீள வழங்கினால் பிரதியமைச்சர் பதவியை துரப்பேன்

கல்குடாப் பிரதேசத்தில் காணி இல்லாதவர்களுக்கு வழங்குவதற்கு வந்த இரண்டாயிரம் ஒப்பங்களை திருப்பிய மௌலவி மீள வழங்குவாராக இருந்தால் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கு நான் தயார் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சவால் விட்டார்;.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வர்த்தகர் ஏ.நிசார் ஹாஜி தலைமையில் ஓட்டமாவடியில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

கல்குடாவில் இருக்கின்ற இரண்டாயிரம் குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக ஒப்பங்கள் கொண்டுவரப்பட்டது. இவர்கள் எனக்கு சேறு பூச வேண்டும் என்பதற்காக பல இடங்களில் முறையிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து ஒப்பங்களை மீள கொண்டு செல்ல வைத்த மாபெரும் சீர்திருத்தவாதிகள்.

கல்குடாப் பிரதேசத்தில் இருக்கின்ற தாய்மார்கள் மற்றும் காணி இல்லாதவர்களுக்கு வழங்குவதற்கு என்னால் கொண்டு வந்த ஒப்பங்கள் இவர்களின் நடவடிக்கையால் கொண்டு செல்லப்பட்ட இரண்டாயிரம் ஒப்பங்களை ஹாமிது மௌலவி வழங்குவாராக இருந்தால் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தயாராக இருக்கின்றேன். ஏனெனின் காணியும் கல்வியும் என்னுடைய நோக்கு.

ஒட்டுமொத்த கல்குடா முஸ்லிம் சமூகத்துக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் ஹாமிது மௌலவி என்ற உலமா இந்த பெரியதொரு அநியாயத்தை செய்துள்ளார். அமீரலியின் குடும்பத்துக்கு கொடுப்பதற்காக வந்த ஒப்பத்தை தான் அனுப்பி வைத்தோம் என்றார்.

எனது குடும்பம் இரண்டாயிரம் அல்ல கல்குடாவிலுள்ள பதினேழாயிரம் குடும்பமும் எனது குடும்பம் என்பதை அந்த ஆலிமுக்கு சொல்ல வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் சீர்கெட்டு போய் உள்ளார் செருப்பால் அடிக்கத்தான் வேணும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள் நாங்களல்ல.

ஆனால் இந்த உள்ளுராட்சி தேர்தலில் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணமும் அவர்களுக்கு அடிக்கப் போகின்றது. நீங்களும் உங்களுடைய செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள். அதை நாங்கள் செய்யத் தயாராக இல்லை. ஒரு தலைவனுக்கு சொல்ல பயன்படுத்தக் கூடாது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி ஏசுகின்றீர்கள். ஆனால் எங்களது கட்சியில் இந்தக் கலாச்சாரம் கிடையாது.

இந்த உலமா கடந்த காலத்தில் ஊருக்கு அநியாயத்தை¸ பல ஊழல்களை செய்து விட்டு தற்போது ஓட்டமாவடி பிரதேச சபையை ஊழற்ற சபையாக மாற்ற வாக்குக் கேட்கின்றார்கள் என்றார்.

6Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*