இலங்கையில் பிரபாகரனின் கழுத்து தொங்கியுள்ளதா? சர்ச்சையை திசை திருப்பும் இராணுவ தளபதி

1067
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கொல்லப் போவதாக மிரட்டிய இராணுவ அதிகாரிக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்படாது என இலங்கை இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என இராணுவ தளதிபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பிரியங்க நடந்து கொள்ளவில்லை. தனது சீருடையில் இருந்த தேசிய கொடியை காட்டி, இலங்கையில் பிரபாகரனின் கழுத்து தொங்கியுள்ளதாக அவர் காட்டியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதென இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரியின் செயற்பாடு சர்வதேச மட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியங்க பெர்னாண்டோவை பணி நீக்கம் செய்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் அதனை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக பணியில் இணைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.