நித்தியானந்தாவின் மறு முகம்!! அச்சத்தில் மக்கள்…

“தை்தியருக்கு படித்த தம் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா சாமியார் அணி கடத்தி விட்டதே இதை கேட்பார் யாருமே இல்லையா?” என பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் பெற்றோர் கதறி அழுதனர்.

வைத்தியருக்கு படித்த மகன் மனோஜ்குமார் மற்றும் சிறுமி நிவேதா ஆகியோரை, சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இருந்து மீட்க வேண்டும் என பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சார்ந்த காந்தி என்பவர் காவற்துறையில் முறையிட்டனர்.

இதன் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வீ .பாஸ்கரன் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான காவற்துறைக் குழு பிடதி சென்றது.

அங்கிருந்து மனோஜ்குமார் மற்றும் நிவேதா இருவரையும் மீட்டு அழைத்து சென்று பெரியகுளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்ற விசாரணையில் நிவேதா, உறவினர்களுடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.

இதனையடுத்து நிவேதா உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் வைத்தியர் மனோஜ்குமார் பிடதி ஆசிரமத்துக்கே செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் அவர் பிடதி ஆசிரமம் செல்ல அனுமதிக்கப்பட்டார். பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் வைத்தியர் மனோஜ்குமார் பிடதிக்கு சென்றார்.

தங்களது கண்முன்னாலேயே மகன் பிரிந்து நித்தியானந்தா ஆசிரமம் செல்வதை தாங்க முடியாமல் வயதான பெற்றோர் கதறி கூச்சலிட்டனர்.

அப்போது, “அய்யோ என் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா ஆட்கள் கடத்திட்டு போயிட்டாங்களே… 75 லட்சம் செலவு செஞ்சு டாக்டருக்கு படிக்க வெச்சேனே… இதைக் கேட்குறதுக்கு யாருமே இல்லையா?” என கதறினர். இந்த பெற்றோரின் கதறல் நீதிமன்ற வளாகத்தையே அதிர வைத்தது.

நித்தியானந்தா மீது பல்வேறு முறைப்பாடுகள், சர்ச்சைகள் உள்ளன. தற்போது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளைப் பிரித்து கடத்திச் செல்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழக, மற்றும் இந்திய அதிகார வர்க்கத்தினர் நித்தியானந்தாவின் அடாவடித்தனங்களை அனுமதிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*