லண்டனில் உள்ள பிரிகேடியர் பிரியங்க போர்க்குற்றவாளியா?? கசிந்தது ஆதாரங்கள்…

லண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவும் இறுதிப் போரின் போர்க் குற்றவாளி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வன்னிப் பகுதியில் நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள் மீறப்பட்ட பகுதிகளில் அவர் பணியாற்றியமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர் 2009 இல் பொது கட்டளை அதிகாரியாகவும், 2010– 2013 வரையான காலப்பகுதியில் கெமுனு வாட்ச் முகாம் கட்டளை அதிகாரியாகவும், 2014- இல் கிளிநொச்சி மாவட்ட கட்டளை அதிகாரியாகவும், 2016 இல் இந்தியாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி பயிற்சிகளை இயக்கும்

அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இறுதிப் போரில் சரண் அடைந்தவர்களைப் பொறுப்பேற்று வெலிஒயாவுக்குக் கொண்டு சென்றமை உள்ளிட்ட பல இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், தந்திரோபாய அடிப்படையில் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

62Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*