விடுதலைப் புலிகளின் கனரக வாகனத்தை தகர்த்த அதிரடிப்படையினர்

493
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கனரக வாகனம் ஒன்றை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து அதிரடிப்படையினர் தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் இரும்புப் பெட்டகம் ஒன்றை நிலத்தில் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்..

இந்த நடவடிக்கைக்காக அப்பொழுது அவர்கள் பயன்படுத்திய கனரக வாகனம் ஒன்றும் அவ்விடத்தில் புதைந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் தக்கப் புதையலை தேடும் நடவடிக்கையில் நேற்று அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் அங்கிருந்து விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல் அதிரடிப்படையினருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்பட்ட கனரக வாகனத்தை அதிரடிப்படையினர் அவ்விடத்தில் இருந்து மீட்டு தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.