மீண்டும் கலக்க வரும் ஷகீலா!!

256
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷகீலா மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஷகீலாவுக்கு அறிமுகம் தேவையில்லை. கேரளாவில் ஷகீலாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஒரு காலத்தில் ஷகீலா படம் வெளியாகின்றது என்றால் மம்மூட்டி, மோகன்லாலே தங்களின் படங்களை அதே நேரத்தில் வெளியிட அஞ்சுவார்கள்.

அந்த அளவுக்கு தனது கவர்ச்சியால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். கவர்ச்சியைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்திய ஷகீலா படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஷகீலா. சீலாவதி சாய் ராம் தாசரி இயக்கியுள்ள சீலாவதி வாட் தி எஃப்…? என்ற தெலுங்கு படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஷகீலா.

படத்தின் முதற்பக்கத்தை ஷகீலா மற்றும் படக்குழுவினர் வெளியிட்டனர். சீலாவதி ஒரு சைக்கோ த்ரில்லர் படமாம். படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் ஷகீலா இரண்டு குழந்தைகளுடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறார். படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. சீலாவதி ஷகீலாவின் 250 ஆவது படம். குடும்பத்தார் வற்புறுத்தியதால் தான் கவர்ச்சி படங்களில் நடித்ததாக ஷகீலா முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.