சிக்கிக்கொண்ட ராஜபக்ஷர்கள்…!! விரிக்கப்படும் வலை!

730
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கடந்தகால ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்கவை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சிக்காலத்தில் மிக் ரக விமானக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழலை அம்பலப்படுத்தியதன் காரணமாக லசந்த விக்ரமதுங்க நடுவீதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்புபட்டுள்ளதாக சாட்சியங்கள் கிடைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. லசந்தவின் கொலையுடன் இராணுவம் மற்றும் பொலிஸார் தொடர்புபட்டுள்ளமையினால் கடந்த கால ஆட்சியாளர்களின் சதிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அதேபோன்றுமிக் விமான ஊழலுடன் தொடர்புபட்டுள்ள உதயங்க வீரதுங்கவை மஹிந்த ராஜபக்ஷ பாதுகாத்து வந்துள்ளார் என்பதும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உதயங்க வீரதுங்க கைது செய்வதன் மூலம் லசந்தவின் கொலை மட்டுமல்லாது கடந்த கால ஊழல்களுக்கும் சட்டநடவடிக்கை எடுக்க முடியும்.

கடந்தகாலத்தில் ராஜபக்ஷர்கள் மேற்கொண்ட ஊழல்கள் அனைத்திற்கும் அவர்கள் பதில் கூறியாக வேண்டும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.