கிணற்றைக் காணோம் வடிவேலுவின் பாணியில் சாலையைப் பெயர்த்து விற்ற திருடன்

கிணற்றைக் காணோம் என்ற வடிவேலுவின் நகைச்சுவை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானது. வடிவேலுவின் நகைச்சுவையை நிஜவாழ்வில் செய்துகாண்பித்திருக்கின்றார் சீனாவைச் சேர்ந்த ஷிகு.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் சாங்கேசு என்ற கிராமத்திற்கு செல்லும் 800 மீட்டர் சாலை இரவோடு இரவாக திடீரென மாயமானது.

கான்கிரீட்டால் போடப்பட்டிருந்த அந்த சாலையை யாரோ ஒரு மர்ம நபர் வெட்டிப் பெயர்த்து எடுத்துச் சென்று விட்டார்.இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ‘ஷிகு’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு நபர் இந்த சாலையை வெட்டி எடுத்து, திருடிச் சென்றது தெரிய வந்தது.

அந்த சாலையின் 500 தொன் கான்கிரீட் கலவையை உடைத்து நொறுக்கி அதை விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை 795 அமெரிக்க டொலர்களுக்கு விற்றிருக்கிறார். இதனால், பொலிசார் இந்த மகா கெட்டிக்காரரை கைது செய்துள்ளனர்

46Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*