இன்று அதிகாலை கையும் களவுமாக சிக்கிய விகாராதிபதி

1298
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

இன்று அதிகாலை கையும் களவுமாக சிக்கிய விகாராதிபதி

பனாமுரே – 8 ஆவது மைல்கள் – போதிவெவ பிரதேசத்தில் விகாரையொன்றில் புதையில் தோண்டிய அந்த விகாரையின் விகாராதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள 18 லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசோதனை இயந்திரம் (scan machine) ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறை சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்டி கொண்டிருந்த மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்காக காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள விகாரதிபதி இன்று எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.