யாழ். இளவாலை பகுதியில் 25 வயதான யுவதி ஒருவர் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1094
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தாக்குதலுக்கு இலக்கான யுவதி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றுள்ளதுடன், யுவதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, யாழ். மாதகல் பகுதியை சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவரும் நேற்றைய தினம் மர்ம நபர்களினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.