அலுவலகத்துக்குள் காட்டை உருவாக்கிய அமேசன்

அமெரிக்காவில் அமேசன் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தனது ஊழியர்கள் பணியாற்ற புதிய அலுவலகத்தில் சிறிய ‘அமேசன் காடு’ உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவில் ‘மைக்ரோசாப்ட்’, ‘பேஸ்புக்’, ‘ஆப்பிள்’ என அனைத்து நிறுவனங்களும் புதிதாக நவீன முறையில் அலுவலகம் கட்டி வருகின்றது.

இந்த வகையில் அமேசன் நிறுவனம் புதிய வடிவில் வித்தியாசமாக கட்டுகின்ற இந்த கட்டிடத்தில் குருவிக்கூடு போன்ற 3 கூடுகள்,பெரிய மரங்கள் , ஆங்காங்கே சிறு சிறு அருவிகளும் அமைக்கப்பட உள்ளன.

இதன்மூலம் காட்டுக்குள் இருக்கும் உணர்வு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. குருவி கூடு போன்ற ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் 800 பேர் வரை இருக்க முடியும்.

இந்த பணிக்காக மொத்தம் 600 பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்து முக்கிய படங்களின் கலைஇயக்குனர்கள் வரவழைக்கப்பட்டு கடந்த 3 வருடங்களாக அலுவலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வடிவமைத்துள்ளனர்.

18Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*