நாளை என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ?கண்டிப்பா பாருங்க…

நாளைய தினம் ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. 150 ஆண்டுகளுக்குப் பின்னர் வானத்தில் நிகழ உள்ள அபூர்வ நிகழ்வாகும். கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்.

சூரியன் மற்றும் சந்திரனுக்கு நடுவில் பூமி வருவதும், இதனால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதும் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஜனவரி 31ஆம் தேதியன்று சந்திரன் சிவப்பாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இது ரத்த நிலவு (ப்ளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது

குழந்தைகள், கர்ப்பினிகள், நோயுற்றவர்கள் என அனைவரும் கிரகணம் விட்டபிறகு குளித்துவிட வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும். சந்திர கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி.

கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரையிலான முழு சந்திரகிரகண வேளையில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும். நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் ஹோமமானது இந்த வேளையில் செய்யப்படும் போது ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும்

கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தந்தருளும் என்கிறது சாஸ்திரம். மேலும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கிரகணத்தின் போது, ஜபம் செய்து கொண்டிருக்கலாம். தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.

கிரகண நேரத்தில் கோவில்கள் நடை சார்த்தப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் கோவில்கள் திறக்கப்பட்டு, இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் செய்யப்படும். கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம். அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*