இய­லாமை கார­ண­மாக போரில் தோற்­றுவிட்டு என்­னைத் துரோகி என்பதில் என்ன நியாயம்? கருணா கேள்வி

இய­லாமை கார­ண­மாக போரில் தோற்­று­விட்டு என்­னைத் துரோகி என்­ப­தில் என்ன நியா­யம் உள்­ளது. இவ்­வாறு முன்­னாள் பிரதி அமைச்­சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரன் (கருணா) கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

களு­வாஞ்­சிக்­கு­டி­யில் நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போர் என்­னால் நிறுத்­தப்­பட்­ட­தா­லேயே இன்று இளை­ஞர்­கள் மிக­வும் சுதந்­தி­ர­மாக நட­மாடித் திரி­கின்­ற­னர். போர் செய்ய முடி­யாது என்று போராட்­டத்­தில் இருந்து வில­க­வில்லை. இளை­ஞர்­க­ளின் நன்மை கரு­தியே நான் வில­கி­யி­ருந்­தேன். இத­னையே கருணா துரோகி என்று கூறு­கின்­ற­னர். துரோ­கி­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் புக்­குள்­தான் உள்­ள­னர்.

நாங்­கள் விடு­தலைப் போரா­ளி­க­ளாகப் போரா­டி­னோம். சிறிது காலத்­தின் பின்­னர் வெளி­நா­டு­கள் எங்­களை பய­ரங்­க­ர­வாத இயக்­க­மாக்­கி­யது. இதே நேரத்­தில் எங்­க­ளுக்குத் தெரி­யா­மல் தலை­வ­ரும் பொட்­டம்­மா­னும் முடி­வெ­டுத்து தமிழ் நாட்­டில் ராஜீவ் காந்­தியைக் கொலை செய்­த­னர்.

இத­னால் இந்­தி­யா­வில் தமி­ழீழ விடு­த­லைப் பு­லி­களை தடை செய்­த­னர். அத­னைத் தொடர்ந்து 26 நாடு­கள் பயங்­க­ர­வாத இயக்­க­மாக தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்தை தடை செய்­தி­ருந்­த­ன.

அமெ­ரிக்க இரட்­டைக் கோபுரத் தாக்­கு­த­லின் பின்­னர் உல­கில் எந்­த­வொரு பயங்­க­ர­வாத இயக்­க­மும் இருக்க கூடா­தென அமெ­ரிக்கா உள்­பட உலக நாடு­கள் முடி­வெ­டுத்­தன. இந்தக் கால கட்­டத்­தில் தான் இலங்கை அர­சுக்­கும் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்துக்கும் இடை­யில் பேச்சு இடம்­பெற்று வந்­தது.

இதில் ஒரு ஒப்­பந்­தத்­தில் கையொப்­பம் இட்­ட­மை­யா­லேயே என்­னு­டன் தலை­வர் முரண்­பட்­டுக் கொண்­டார். இதன் பின்­னர் நான் ஒதுங்­கிக் கொண்­டேன்.

இய­லாமை கார­ண­மாக போரில் தோற்­று­விட்டு என்­னைத் துரோகி என்­ப­தில் என்ன நியா­யம் உள்­ளது. மட்­டக்­க­ளப்­பில் இன்று பார்த்­தால் தமி­ழ­ரின் நிலை பின்­னோக்கிச் சென்று கொண்­டி­ருக்­கின்­றதுய. இதனைத் தட்டிக் கேட்­ப­தற்கு எவ­ரும் இல்லை பணத்தை வாங்­கி­விட்டு முத­ல­மைச்­சர் பத­வியை விற்­றுள்­ள­னர்.

உல­கத்­திலே ஒரு எதிர்க்கட்சி வரவு –செல­வுத் திட்­டத்துக்கு வாக்­க­ளித்த வர­லாறு உண்டா? அது இங்­கு­தான் நடந்­துள்­ளது. அனைத்துக்கும் கை உயர்த்­திக் கொண்டு இருக்­கின்­ற­னர். இப்­படி அர­சுக்கு முட்­டுக்­கொ­டுப்­பதை விட அமைச்சு பதவி எடுத்­துக்­கொண்டு மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­தியைச் செய்­யுங்­கள் என்­றார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*