வீட்டின் நடுப்பகுதியில் விலை மதிப்பில்லாத புதையல்!

1386
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

சொந்த வீட்டின் நடுப்பகுதியில் விலை மதிப்பில்லாத புதையல் தேடிய கும்பல் ஒன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்திற்குட்பட்ட உடதும்பர பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடதும்பர பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது எட்டுப் பேர் அடங்கிய கும்பல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களில் வைத்தியர், பேருந்து நடத்துனர், இரு வர்த்தகர்கள் உள்ளிட்ட 8 கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலத்திற்கு கீழ் புதையல் இருப்பதை கண்காணிக்கும் இயந்திரம், மின்சாரம் வழங்கும் இயந்திரம், கெப் வண்டி உட்பட பல பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் பூஜை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.