கூட்டமைப்பின் மேடையில் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த துளசி.

211
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கூட்டமைப்பின் ஆதரவுக்கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசி மேடையிலிருந்த சுமந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

அன்மையில் கனடா சென்ற சுமந்திரன் அங்குபேசும்போது “நாங்கள் அரசுடன் பேசும்போது விமர்சிக்கும் நீங்கள் விடுதலைப்புலிகள் அரசுடன் பேசும்

போது தமிழீழத்தை கைவிட்டுத்தானே பேசப்போனார்கள் அவர்களை ஏன் நீங்கள் கேள்வி கேட்கவில்லை” என கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு சுமந்திரன் பங்குபற்றிய பிரச்சார கூட்டத்தில் பதிலளித்த துளசிஅவர்கள் தலைவர் தமிழீழத்தை கைவிட்டு பேசவில்லை பேசிப்பயனில்லை அடித்துத்தான் பெறவேண்டுமென போராடிய நாங்கள் எம்மை பலப்படுத்துவதற்கான இடைக்கால ஏற்காடாகவே அரசுடன் பேசினோம் என பதிலளித்தார்.

இதை அவர் கூறியபோது மக்கள் கைகளைத்தட்டி ஆரவாரித்தமை குறிப்பிடத்தக்கது.