தரைமட்டமாக்கப்பட்ட சம்பூர் தாதுகோபுர அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

81
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

திருகோணமலை, சம்பூர் தாதுகோபுரம் குறித்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தொல்பொருளியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏழு பேர் கொண்ட குழுவொன்று அங்கு அகழ்வாராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக திணைக்களத்தின் பதல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பூர் தாதுகோபுரமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இனந்தெரியாத நபர்களினால் இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக தொல்பொருளியல் திணைக்களம், பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த தாதுகோபுரமானது அநுராதபுர யுகத்தின் ஆரம்ப காலத்திற்குரியது எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய, தற்போது அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.