மிக சிறிய உதவி இந்த முதியவர்கள் பசியாற வழி கிடைக்கும்!

1666
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

A9 வீதியால் வவுனியா செல்லும்போது பன்றிக்கெய்த குளம் பாடசாலைக்கு அன்மித்ததாக பழைய STF முகாமுக்கு முன்பாக உள்ள காணியில் ஒரு சிறிய கொட்டில் வீட்டில் இந்த வயதான தம்பதிகள் வசிக்கின்றனர்.

STF முகாமில் கிடந்த பொருட்களை வைத்து இந்த மண் குடிசையை அமைத்துள்ளனர். உணவுக்காக பெரும் போராட்டம் நடத்துகின்றனர் இந்த அம்மா வீடுகளுக்கு சென்று உணவு பொருட்களை வாங்கி வருவதை பலதடவை பார்த்துதிருக்கின்றேன். இவர்களுக்கு உதவலாம் என நினைத்து அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தேன். ஒரு வேளை மட்டுமே யாராவது வீடுகளுக்கு சென்று வாங்கி வந்து உண்கின்றனர். ஆனாலும் வாழ்கையை எதிர்த்து போராடுகின்றனர். தங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துள்ளனர். சிறிய மறக்கறி தோட்டம் வைத்துள்ளனர். அதற்கு நீர் பாச்சுவதற்கு எந்த வசதியும் இல்லை.

யாராவது உதவும் நல்ல மனிதர்கள் இவர்களுக்கு 50முட்டை இடும் கோழிகளும் 5 ஆடும் வளர்க்க உதவினால் இவர்கள் தங்கள் கடைசி நாள்வரை மூன்று நேரமும் சாப்பிட வழி கிடைக்கும். அந்த சிறிய மரக்கறி தோட்டத்துக்கும் நீர்விட வழி செய்து கொடுத்தால் போதும்.

மிக சிறிய உதவி இந்த முதியவர்கள் பசியாற வழி கிடைக்கும்