லண்டனில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோவில்

79
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

லண்டனில் உள்ள ஒரு மிகப்பெரிய கோவில் அங்கு வசிக்கும் இந்து சமய மக்களை உடல் உறுப்புதானம் செய்ய வலியுறுத்துகிறது.

லண்டனில் உள்ள பாப்ஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் 50 பேர் திரள்கிறார்கள், இங்கு அவர்கள் கடவுளை வணங்குவதற்காக வரவில்லை, உடல் உறுப்பு தானம் குறித்து பேசுவதற்காக வந்திருக்கிறார்கள்.

இந்துக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்து தவறான புரிதல் இருக்கும் நிலையில் அதை களைவதற்காகத்தான் இந்த சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து கோவிலின் தலைமை சாது யோக்விவேக்தாஸ் கூறுகையில், ஒருவருக்கு வாழ்வளிப்பது, இந்துச் சமயத்தில் தானமாக பார்க்கப்படுகிறது.

ஆசியர்களாகிய நாங்கள், சமய பழக்கங்களில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்கள் சமயத்தில் உடல் உறுப்பு தானம் செய்யாதீர்கள் என்பார்கள். ஏனெனில் நாங்கள் சொர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என கூறுகிறார்.

பிரித்தானியாவில் 2017-ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆயிரம் ஆசியர்கள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில் 79 ஆசியர்கள்தான் சிறுநீரகம் கொடை அளித்து இருக்கிறார்கள்.

பிரித்தானியா தேசிய சுகாதார சேவை அமைப்பின் கணக்குப்படி, 2015 ஆம் ஆண்டு உடல் உறுப்புக்காக காத்திருந்த 466 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள்.

இந்து மக்களிடையே உடல் உறுப்புதானம் குறித்து உள்ள மனத்தடையை நீக்க வேலை செய்து வரும் கிரித் மோடியின் குடும்பத்தார் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து கிரித் மருத்துவமனையில் இருந்தார்.

அப்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய எங்கள் குடும்பத்தாரிடம் பரிசோதனை செய்யப்பட்ட போது கிரித் மனைவியின் சிறுநீரகம் அவருக்கு பொருந்தியது.

இதையடுத்து அறுவை சிகிச்சை நடக்க சில மாதங்களில் கணவன், மனைவி குணமடைந்து தற்போது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இப்போது எங்கள் குடும்பம் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த லண்டனில் வாழும் ஆசிய மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது என கூறியுள்ளனர்.