கட்டார் மன்னர் குடும்பத்துடன் இலங்கையில்

437
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கட்டார் மன்னர் சேக் தமின் பின் அகமட் அல் தானி மற்றும் அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டார் மன்னரின் அழைப்பை ஏற்று கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டார். இது கட்டார் நாட்டுக்கு இலங்கையின் அரச தலைவர் ஒருவர் மேற்கொண்ட முதலாவது விஜயமாகும்.

ஜனாதிபதியின் கட்டார் விஜயத்தை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளதுடன் இருத்தரப்பு ஒத்துழைப்புக்ள அதிகரித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.