தமி­ழ­ரி­ட­மிருந்து முல்லைத்தீவு பறி­போ­கும் அபா­யம்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமி­ழர்­க­ளின் காணி­க­ளில் சிங்­கள மக்­கள் குடி­யேற்­றப் படு­வ­தும் புதிய குடி­யேற்றங்­களை இலக்­கா­கக்­கொண்டு அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தும் தடுக்­கப்­ப­டா­விட்­டால் தமி­ழர்­கள் அந்த மாவட்­டத்தை இழக்­கும் நிலை ஏற்­ப­டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் எச்­ச­ரிக்­கின்­றார்.

முல்­லைத்­தீ­வின் சூரி­ய­னாறு, பெரி­யாறு என்­ப­வற்றை மறித்து கிவுல் ஓயா என்ற பெய­ரில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் பெரும் நீர்ப்­பா­ச­னத் திட்­டம் தடுத்து நிறுத்­தப்­ப­டா­விட்­டால் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமி­ழர்­க­ளின் இருப்பு கேள்­விக்­கு­றி­யா­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இந்­தப் பிரச்­சினை தொடர்­பான தீர்­மா­னம் ஒன்றை இன்று அவர் மாகாண சபை­யில் கொண்­டு­வ­ர­வுள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­தா­வது:

காலங்­கா­ல­மா­கத் தனித்­த­னமை வாய்ந்த பண்­பாட்டு அடை­யா­ளங்­க­ளோடு இருந்த பட்­டிக்­கு­டி­யி­ருப்பு, மரு­தோடை, ஒதி­ய­மலை, தண்­டு­வான், குமு­ழ­முனை, நெடுங்­கேணி, சாம்­பன்­கு­ளம், வேப்­பங்­கு­ளம்,கோட்­டைக்­கனி,ஆமை­யங்­கு­ளம், ஆலங்­கு­ளம், கண்­ணாட்டி, அக்­க­ரை­வெளி எனப் பழைய கால ஊர்­க­ளும் குளங்­க­ளும் அதனை அண்­டிய வயல்­கள் குடி­யி­ருப்­பு­க­ளு­டன் அமைந்­துள்­ளது மட்­டு­மன்றி கடல் வள்­ளங்­க­ளை­யும் மிகை­யா­கக் கொண்ட கொக்­கி­ளாய், கொக்­குத்­தொ­டு­வாய், கரு­நாட்­டுக்­கேணி போன்ற பாரம்­ப­ரிய இடங்­கள் தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரிய குடி­யி­ருப்­புக்­க­ளாக இருந்­தன.

எனி­னும் இதற்­குள் சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அவற்­றுக்கு புதிய சிங்­கள பெயர்­கள் சூட்­டப்­பட்டு தமி­ழர்­க­ளின் அடை­யா­ளங்­கள் அளிக்­கப்­ப­டு­கின்­றன.

அந்­த­வ­கை­யில் மண்­கிண்டி மலை அல்­லது மறிச்­சுக்­கட்­டிக்­கு­ளம்– ஜன­க­புர, ஆமை­யன் குளம் — கிரி­பன்­வெவ, முந்­தி­ரி­கைக் குளம் அல்­லது உந்­து­ரா­யண் குளம் — நெலும்­வெவ, சிலோன் தியேட்­டர்ஸ் பண்­ணை–­க­ஜ­பா­புர அல்­லது நவ­க­ஜ­பா­புர, கென் பண்­ணை–­கல்­யா­ண­புர, வெடி­வைத்­த­கல்லு – -நிக்­க­வெவ, மயில்­கு­ளம்–­மொ­ன­ர­வெவ, வவு­னியா வடக்கு பிரி­வு­கள் சில ஹகட்­டு­கஸ்­வெவ என சிங்­க­ளத்­திற்­குப் பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளன.

முல்­லைத்­தீ­வின் சூரி­ய­னாறு, பெரி­யாறு என்­ப­வற்றை மறித்து கிவுல் ஓயா என்ற பெய­ரில் பெரும் நீர்ப்­பா­ச­னத் திட்­டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.இத்­திட்­டத்­திற்­காக இரா­மன் குளம், கொட்­டோ­டைக் குளம், வெள்­ளாங்­கு­ளம், ஓயா­ம­டுக்­கு­ளம், ஆகிய குளங்­கள் மற்­றும் அதற்­கு­ரிய வயல் நிலங்­கள் யாவும் மூடப்­பட்டு மேற்­படி திட்­டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்­தப் பகு­தி­யில் இருந்த நிலங்­கள் யாவும் தமிழ் மக்­க­ளின் பூர்­வீக நிலங்­கள் ஆகும். உரு­வாக்­கப்­ப­டும் இந்­தப் புதிய திட்­டத்­தின் மூலம் 6 ஆயி­ரம் ஏக்­கர் வயல் நிலங்­க­ளுக்கு நீர் பாய்ச்­சக்­கூ­டிய விதத்­தில் சுமார் ஆயி­ரம் மில்­லி­யன் ரூபாய்க்கு மேல் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டே இந்த வேலைத்­திட்­டங்­கள் நடை­பெ­று­கின்­றன.

தமிழ் மக்­கள் பல­ரின் கைக­ளில் தமது பூர்­வீ­கக் காணி­க­ளுக்­கான சான்­றா­வ­ணங்­கள் இருந்த நிலை­யி­லும் கடந்த அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­பாக குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு புதிய அனு­ம­திப் பத்­தி­ரத்தை முன்­னைய ஆட்­சி­யா­ளர்­கள் மயில்க்­கு­ளம் பகு­தி­யில் வைத்து வழங்­கி­யி­ருந்­தார்­கள்.

மகா­வலி(ட)

மகா­வலி(ட)வல­யம் தொடர்­பான வர்த்­த­க­மானி பிந்­திய அறி­வித்­தல்­கள் 1982, 1988, 2014 ஆகிய ஆண்­டு­க­ளில்­வெ­ளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இவற்­றின் அடிப்­ப­டை­யில் மகா­வலி)(ட) வல­யம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் மாங்­கு­ளம் வீதி உள்­ள­டங்­க­லாக முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கப் பகு­தி­வ­ரை­யும் விரி­வாக்­கப்­பட்­டுள்­ளது. இவை­கள் மாவட்­டத்­தின் அபா­யத்தை உணர்த்­து­வ­தா­க­வுள்­ளன.

முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தின் கடந்த வருட புள்­ளி­வி­வ­ரத்­தின்­படி 39 ஆயி­ரத்து 590 தமிழ்க் குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 24 ஆயி­ரத்து 735 தமிழ் மக்­க­ளுக்கு ஒரு மாதி­ரி­யும் குடி­யேற்­றப்­பட்ட 3 ஆயி­ரத்து 336 சிங்­க­ளக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஒரு இலட்­சத்து ஆயி­ரத்து 189 சிங்­கள மக்­க­ளுக்கு வேறு மாதி­ரி­யா­க­வும் அர­சின் செயற்­திட்­டங்­கள் அமை­கின்­றன.

இதே நிலை நீடித்­தால் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமி­ழின இருப்பு குலைக்­கப்­பட்டு சிங்­கள மக்­க­ளைப் பெரும்­பான்­மை­யி­ன­ரா­கக் கொள்­ளும் மாவட்­ட­மாக மாறும் நிலை ஏற்­ப­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

83Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*