மைத்திரிக்கு எதிராக அவர் புதல்வி! வைரலாகும் புகைப்படம்

689
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புதல்வி சத்துரிக்கா சிரிசேன தந்தையின் கருத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக வலைத்தளங்கள் விமர்சித்து வருகின்றன.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது சத்துரிக்கா சிரிசேன சிறுவர்களுக்கு மைலோ பால் பக்கெற்றுகளை விநியோகித்துள்ளார். இந்த சம்பவமானது ஜனாதிபதியின் கருத்துக்கு முரண்பட்ட வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி “மைலோ பாலில் அதிகளவு சீனி உள்ளடக்கப்பட்டுள்ளதால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பானமாக மைலோ காணப்படுகின்றது, எனனே இதனை பருகுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், மைலோவானது தடைசெய்யப்படவேண்டிய பானவகைகளுல் ஒன்றாகும் என்ற வகையிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும் தற்போது ஜனாதிபதியில் புதல்வியே, மைத்திரி எதிர்த்த பானத்தை விநியோகித்து வருகின்றார். இந்த விடயத்தில் தந்தையின் கருத்துகளுக்கு புதல்வி முரண்பட்டு நடந்து வருகின்றார் எனவும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் எதிர்மறையான கருத்துகளின் பின்னரும் குறித்த பானம் உற்பத்திகள் மட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.